ஐ.பி.எல். 2025 ஸ்ட்ரீமிங் செக் லிக்ஸ்ட் இதோ! - ரீஜார்ஜ் முதல் 4K டிவி வரை!

20 hours ago
ARTICLE AD BOX

இந்தியன் பிரீமியர் லீக்கின் (IPL) 18வது பதிப்பு மார்ச் 22 ஆம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையேயான மோதலுடன் தொடங்க உள்ளது. கடந்த ஆண்டைப் போல ஐ.பி.எல்.ஸ்ட்ரீமிங் இலவசமாக இல்லாமல், பார்வையாளர்களுக்கு தற்போது ஜியோஹாட்ஸ்டார் JioHotstar சந்தா தேவைப்படும்.

Advertisment

ஜியோ ஹாட்ஸ்டார் சந்தா:

ஜியோ ஹாட்ஸ்டார் என்பது ஐ.பி.எல். 2025-ன் நேரடி ஒளிபரப்பை வழங்கும் பிரத்யேக தளமாகும் . டி.வி. உள்ள பயனர்கள் ஐபிஎல் 2025 ஐ ஸ்டார் ஸ்போர்ட்ஸில் 4K-வில் பார்க்க முடியும். 4K செட்-டாப் பாக்ஸ் இல்லாதவர்கள் ஜியோஹாட்ஸ்டார் செயலி வழியாக கண்டுரசிக்க முடியும்.

சிறந்த அனுபவத்திற்கு, 3 மாதங்களுக்கு ரூ.499 விலையில் உள்ள ஜியோ ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தா சரியாக இருக்கலாம். ஜியோ, ஏர்டெல் மற்றும் விஐ போன்ற நெட்வொர்க் ஆபரேட்டர்கள் அதே திட்டத்தை தள்ளுபடி விலையில் வழங்குகின்றன. அண்மையில் ஜியோ "அன்லிமிடெட் ஆஃபர்"ஐ அறிமுகப்படுத்தியது, இதில் ரூ.299-க்கு மேல் உள்ள ஒவ்வொரு ரீசார்ஜ் திட்டத்திற்கும் இலவச ஜியோஹாட்ஸ்டார் சந்தா வழங்குவதாக அறிவித்தது. இது ஜியோஹாட்ஸ்டார் செயலியில் 4K-வில் ஐ.பி.எல். ஸ்ட்ரீமிங் செய்கிறது.  

Advertisment
Advertisements

அன்லிமிட்டெட் வைஃபை (அ) டேட்டா திட்டம்:

4K தெளிவுத்திறனில் ஐ.பி.எல் ஸ்ட்ரீமிங் செய்வது அதிக டேட்டாவை எடுத்துக்கொள்வதால், தடையற்ற அனுபவத்திற்காக அன்லிமிட்டெட் பிராட்பேண்ட் திட்டத்தில் இணையலாம். சிறந்த 5G கவரேஜ் உள்ள பகுதியில் வசிக்கிறீர்கள் என்றால், இது அவசியமில்லை. ஏனெனில், ஏர்டெல் மற்றும் ஜியோ தேர்ந்தெடுக்கப்பட்ட ரீசார்ஜ் திட்டங்களில் அன்லிமிட்டெட் டேட்டா வழங்குகின்றன. 4k ஸ்ட்ரீமிங் செய்ய போதுமானதாக இருக்கும்.

தடையற்ற 4K ஸ்ட்ரீமிங்கிற்கு, குறைந்தபட்சம் 25 Mbps வேகத்தில் இணைய வசதி இருப்பது அவசியம். ரூ.1,000-க்கும் குறைவான செலவில் 50 Mbps வேகத்தில் ஏர்டெல் மற்றும் ஜியோவின் ஏர்ஃபைபர் திட்டங்கள் கிடைக்கின்றன.

சிறந்த தொலைக்காட்சி டி.வி எது?

சரியான சந்தா மற்றும் இணைய திட்டம் இருந்தால், ஸ்மார்ட்போன், டேப்லெட், லேப்டாப் (அ) கணினியில் ஐ.பி.எல் ஸ்ட்ரீம் செய்யலாம். இருப்பினும், சிறந்த அனுபவத்திற்கு, பெரிய திரை கொண்ட ஸ்மார்ட் டிவி சிறந்தது. ஐ.பி.எல். ஸ்ட்ரீமிங்கிற்காக ஒரு ஸ்மார்ட் டிவியை வாங்கும்போது, ​​4K தெளிவுத்திறன் கொண்ட மாடலை எவ்வாறு தேர்ந்தெடுப்பது?

4K ஸ்மார்ட் டிவிகள் சுமார் ரூ.20,000-ல் தொடங்குகின்றன. உங்கள் பட்ஜெட் மற்றும் இட வசதியைப் பொறுத்து, நீங்கள் 40-இன்ச், 43-இன்ச், 50-இன்ச், 55-இன்ச் அல்லது 60-இன்ச் ஸ்மார்ட் டிவியைத் தேர்வுசெய்யலாம். 70-இன்ச், 80-இன்ச் அல்லது 100-இன்ச் டிவிகள் போன்ற பெரிய மாடல்களும் பிரீமியம் விலையில் கிடைக்கின்றன. பெரும்பாலான ஸ்மார்ட் டிவிகள் 60 ஹெர்ட்ஸ் (Hz) புதுப்பிப்பு வீதத்தை வழங்குகின்றன. இது ஐ.பி.எல். ஸ்ட்ரீமிங் செய்யும்போது பயனுள்ளதாக இருப்பது மட்டுமல்லாமல் கேமிங் மானிட்டராகவும் பயன்படுத்தலாம்.

தொலைக்காட்சி நீண்ட கால முதலீடாக இருப்பதால், LG, Sony , Samsung, Xiaomi போன்ற புகழ்பெற்ற பிராண்டுகளைத் தேர்வு செய்யவும் . அம்சங்களின் அடிப்படையில் விலைகள் மாறுபடும், ஆனால் உங்கள் டிவியை சவுண்ட்பாருடன் இணைப்பதன் மூலம் உங்கள் அனுபவத்தை மேலும் மேம்படுத்தலாம்.

இந்த 3 அத்தியாவசியங்களுடன், உங்கள் சோபாவில் அமர்ந்து ஐ.பி.எல். 2025-ஐ கண்டுரசியுங்கள்!

Read Entire Article