எடை குறைய டீ!! தினமும் இரண்டு வேளை குடிச்சு பாருங்க!

3 hours ago
ARTICLE AD BOX

எடை இழப்புக்கு தினமும் நெல்லிக்காய் டீ குடியுங்கள். அதன் நன்மைகள் மற்றும் அதை தயாரிக்கும் முறை பற்றி இங்கு அறிந்து கொள்ளுங்கள்.

Amla Tea Benefits For Weight Loss : தற்போது பெரும்பாலான மக்கள் உடல் எடை அதிகரிப்பால் அவதிப்படுகிறார்கள். எடையை குறைக்க அவர்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறார்கள். அதாவது எடையை குறைக்க டயட் இருப்பது, ஜிம்மில் மணிக்கணக்கில் வியர்வை சிந்தி உடற்பயிற்சி செய்வதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். பலர் எடையை குறைக்க கிரீன் டீ அல்லது மூலிகையை டீ குடிப்பார்கள். ஆனால் எடை இழப்புக்கு ஆம்லா டீ மிகவும் நன்மை பயக்கும் தெரியுமா? இது பற்றி நீங்கள் எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆம் தினமும் இரண்டு வேளை நெல்லிக்காயை குடித்தால் குடித்து வந்தால் எடையை எளிதாக குறைத்து விடலாம்.

நெல்லிக்காயில் வைட்டமின் சி, ஆக்சிஜனேற்றிகள் மற்றும் பிற தாதுக்கள் நிறைந்துள்ளன. அவை அனைத்தும், உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுவது மட்டுமின்றி, எடை இழப்புக்கு மிகவும் நன்மை பயக்கும். இப்போது எடையை குறைக்க நெல்லிக்காய் டீ எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும் மற்றும் அதை தயாரிக்கும் முறை என்ன என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க:  இந்த '4' பொருள் போதும்! தண்ணீரில் கலந்து குடிக்கங்க .. கொழுப்பு கரையும்!

உடலை நச்சு நீக்கம் செய்யும்:

நெல்லிக்காயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால், அது உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றி உடல் எடையை குறைக்க உதவுகிறது.

அதிகமாக சாப்பிடுவதை தடுக்கும்:

நெல்லிக்காயில் நிறைய நார்ச்சத்து உள்ளதால், இது செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைப்பது மட்டுமில்லாமல் மலச்சிக்கல், அஜீரணம் போன்ற செரிமான பிரச்சினைகளில் இருந்து நிவாரணம் அளிக்கும். நெல்லிக்காயில் டீ குடிப்பதன் மூலம் பசி குறையும். முக்கியமாக அதிகம் சாப்பிடுவது தடுக்கப்படுகிறது. இது எடை இழப்புக்கு உதவுகிறது.

எடையை குறைக்க உடலில் வளர்ச்சிதை மாற்றம் நன்றாக இருக்க வேண்டும். இதற்கு நெல்லிக்காய் டீ குடிப்பதன் மூலம் உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரித்து, எடையை குறைக்கலாம்.

ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்:

நெல்லிக்காயில் நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் உள்ளதால், இது உடலில் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும். சர்க்கரை நோயாளிகளுக்கு நெல்லிக்காய் டீ மிகவும் நன்மை பயக்கும். இது சர்க்கரை நோய் மற்றும் எடையை கட்டுப்படுத்த உதவும்.

இதையும் படிங்க:  ஒரே மாதத்தில் எடை குறையனுமா? நீங்க பின்பற்ற வேண்டிய டயட் ப்ளான் இதோ!! 

தேவையான பொருட்கள் :

நெல்லிக்காய் பொடி - 2 ஸ்பூன்
துருவிய இஞ்சி - 1 ஸ்பூன்
துளசி இலைகள் - 2 
தண்ணீர் - 2 கப்

செய்முறை:

நெல்லிக்காய் பொடி தயாரிக்கும் முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 2 கப் தண்ணீர் சேர்த்து சூடாக்கவும். பிறகு அதில் துருவிய இஞ்சி, துளசி இலைகள் மற்றும் நெல்லிக்காய் பொடி சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். பிறகு அதை வடிகட்டி அதனுடன் சிறிதளவு தேன் மற்றும் ஒரு சிட்டிகை கருப்பு மிளகு சேர்க்க வேண்டும். அவ்வளவுதான் நெல்லிக்காய் டீ தயார்.

முக்கிய குறிப்பு : நெல்லிக்காய் டீ எடையை குறைக்க உதவினாலும், உங்களுக்கு ஏதேனும் உடல்நல பிரச்சனைகள் இருந்தாலோ அல்லது ஏதாவது நோய்களுக்கு மருந்துகள் உட்கொண்டாலோ மருத்துவரிடம் அணுகிய பின்னரே நெல்லிக்காயில் குடிக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

Read Entire Article