ARTICLE AD BOX
புதுடெல்லி,
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது. இதில் சென்னை, மும்பை, கொல்கத்தா உட்பட மொத்தம் 10 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த தொடரில் கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.
இந்த தொடரில் சாம்பியன் அணிகளான மும்பை - சென்னை இடையிலான ஆட்டம் வரும் 23ம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. இந்த ஆட்டத்தை காண ரசிகர்கள் ஆவலோடு காத்து கொண்டுள்ளனர். இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, மும்பை இந்தியன்ஸ் அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்து அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது யூடியூப் பக்கத்தில் பேசிய அவர் கூறியதாவது, ரோகித்துடன் தொடக்க வீரராக ரியான் ரிக்கெல்டன் அல்லது வில் ஜேக்ஸ் ஆகியோரில் ஒருவரை விளையாட வைக்கலாம். அதனை தொடர்ந்து திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, நமன் திர் ஆகியோர் பேட்ஸ்மேன்களாம இறங்கலாம்.
தொடர்ந்து தீபக் சாஹர், மிட்செல் சாண்ட்னெர், டிரெண்ட் பவுல்ட், ஜஸ்ப்ரீத் பும்ரா, முஜீப் உர் ரஹ்மான் ஆகியோரை அணியில் எடுக்கலாம். பும்ரா உடற்தகுதியுடன் இல்லாதபட்சத்தில் ரீஸ் டாப்லியை லெவனில் சேர்க்கலாம். ரோகித்துடன் வில் ஜேக்ஸ் தொடக்க வீரராக களம் இறங்கினால் ராபின் மின்ஸை அணியில் எடுக்கலாம்.
மும்பை பிளேயிங் லெவன் அணி 1: ரோகித் சர்மா, ரியான் ரிக்கல்டன் (விக்கெட் கீப்பர்), வில் ஜேக்ஸ் / முஜீப் உர் ரஹ்மான், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), நமன் திர், மிட்செல் சான்ட்னர், தீபக் சாஹர், டிரென்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா.
மும்பை பிளேயிங் லெவன் அணி 2: ரோஹித் சர்மா, வில் ஜேக்ஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), நமன் திர், ராபின் மின்ஸ் (விக்கெட் கீப்பர்), மிட்செல் சான்ட்னர், தீபக் சாஹர், டிரென்ட் போல்ட், ரீஸ் டாப்லி / முஜீப் உர் ரஹ்மான்.