ARTICLE AD BOX
டுனெடின்,
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி அந்நாட்டு மகளிர் அணிக்கெதிராக தலா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை நியூசிலாந்து 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையே தற்போது டி20 தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் முதல் ஆட்டத்தில் இலங்கையும், 2வது ஆட்டத்தில் நியூசிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன. இந்நிலையில், தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் 3வது டி20 போட்டி டுனெடினில் இன்று நடக்கிறது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி டி20 தொடரை கைப்பற்றும் என்பதால் வெற்றிக்காக இரு அணிகளும் கடுமையாக போராடும்.
இதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இதையடுத்து இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.