ஏழைகள், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்குரிமை பறிபோகக் கூடாது! -ராகுல் காந்தி

4 hours ago
ARTICLE AD BOX

ஏழைகள், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்குரிமை பறிபோகக் கூடாது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

நடைமுறையில் உள்ள சட்டம் மற்றும் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி, வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைக்கும் பணி மேற்கொள்ளப்படும் என்று தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்தது.

இதுபற்றி மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று வாக்காளர் அடையாள அட்டைகளுடன் ஆதார் எண்ணை இணைப்பதாக அறிவித்துள்ளது. அதிக வாக்காளர்களின் பெயர்களைச் சேர்த்தல், தேவையற்ற பெயர் நீக்கம், போலி வாக்காளர்கள் உள்ளிட்ட பிரச்சினைகளை காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணிக் கட்சிகள் மீண்டும் மீண்டும் எழுப்பி வருகின்றன.

இதையும் படிக்க: சுனிதா வில்லியம்ஸுக்கு வரவேற்பளித்த டால்பின்கள்!

ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் போது போலி வாக்காளர்களைக் கண்டறிய முடியும் என்றாலும், இதனை இணைப்பதில், ஏழைகள் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மக்களும் பாதிப்புக்குள்ளாகி சிரமங்களை எதிர்கொள்ளும் நிலைமை இருக்கிறது. இதனால், எந்தவொரு இந்தியரின் வாக்குகளும் பறிபோகக்கூடாது என்பதை இந்தியத் தேர்தல் ஆணையம் உறுதிசெய்ய வேண்டும்.

தற்போது இந்தியத் தேர்தல் ஆணையம் இந்தப் பிரச்சினையை ஒப்புக்கொண்டுள்ளதால், 2024 ஆம் ஆண்டு மகாராஷ்டிரத்தில் நடைபெற்ற பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல்களின் முழு வாக்காளர் பட்டியலையும் பகிர்ந்து பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதல் பிரச்சினையையும் தீர்க்க வேண்டும் என்ற எனது முந்தைய கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க: சிஎஸ்கே - மும்பை போட்டி: இன்று டிக்கெட் விற்பனை! கிரிக்கெட் ரசிகர்கள் கவனிக்க..!

Read Entire Article