ஏழை-எளியோருக்கு வேட்டி-சேலை

1 day ago
ARTICLE AD BOX

செங்கல்பட்டு: தமிழக காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான செல்வப்பெருந்தகை மாநில தலைவராக பொறுப்பேற்று சிறப்பாக ஒரு வருடம் ஆகிறது. அவர், பணியாற்றியதை கொண்டாடும் விதமாக செங்கல்பட்டு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சுந்தரமூர்த்தி தலைமையில் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து ஏழை-எளிய மக்களுக்கு வேட்டி சேலை வழங்கினர். இதில், நகர காங்கிரஸ் தலைவர் பாஸ்கர், மாவட்ட நிர்வாகிகள் ஜெயராமன், குமரவேல், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி பாலவிக்னேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post ஏழை-எளியோருக்கு வேட்டி-சேலை appeared first on Dinakaran.

Read Entire Article