ARTICLE AD BOX
ஏப்ரல் 1 முதல் வருது.. Netflix ஓடிடி சேவையில் மாற்றம்.. ரூ.199 பிளான் உட்பட எல்லா பிளானிலும்.. என்னது?
பிரபல ஓடிடி ஸ்ட்ரீமிங் பிளாட்ஃபார்ம் (OTT Streaming Platform) ஆன நெட்பிளிக்ஸ் (Netflix) சேவையில் வருகிற 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல்.. 90ஸ் கிட்ஸ்களுக்கு பிடித்த மாதிரியான முக்கிய மாற்றம் ஒன்று வருகிறது. அதென்ன மாற்றம்?
2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல், டபுள்யூடபிள்யூஇ (WWE) என்று சுருக்கமாக அழைக்கப்படும் வேர்ல்ட் விரெஸ்லிங் எண்டர்டெயின்மெண்ட்-க்கான (World Wrestling Entertainment) பிரத்யேக ஸ்ட்ரீமிங் தளம் (Exclusive streaming platform) ஆக நெட்பிளிக்ஸ் மாறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதன்கீழ் டபுள்யூடபிள்யூ-வின் வாராந்திர முதன்மை நிகழ்ச்சிகளான ரா (Raw), என்எக்ஸ்டி (NXT) மற்றும் ஸ்மாக்டவுன் (SmackDown) ஆகியவைகளுடன் சேர்த்து விரெஸ்மேனியா (WrestleMania), சம்மர்ஸ்லாம் (Summer Slam), ராயல் ரம்பிள் (Royal Rumble) மற்றும் மணி இன் தி பேங்க் (Money in the Bank) உள்ளிட்ட பிரீமியம் நேரடி நிகழ்வுகளையும் நெட்பிளிக்ஸ் வழியாக பார்க்கலாம். இதன்கீழ் லைவ் இந்தி வர்ணனையும் கிடைக்கும்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், இந்தியாவில் லைவ் ஸ்போர்ட்ஸ் எண்டர்டெயின்மெண்ட்-க்குள் நெட்பிளிக்ஸ் நிறுவனம் காலடி எடுத்து வைத்து உள்ளது. இந்தியாவில் டபுள்யூடபிள்யூஇ-க்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருப்பதால், ரூ.199 முதல் தொடங்கும் நெட்பிளிக்ஸ் சேவையின் கீழ் மேலும் பல புதிய வாடிக்கையாளர்கள் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் நெட்பிளிக்ஸ் திட்டங்களின் விலை விவரங்கள்: இந்தியாவில் தற்போது மொத்தம் 4 நெட்பிளிக்ஸ் சந்தா திட்டங்கள் அணுக கிடைக்கிறது - மொபைல், பேஸிக், ஸ்டாண்டர்ட் மற்றும் பிரீமியம். நெட்பிளிக்ஸ் மொபைல் திட்டத்தின் விலை மாதத்திற்கு ரூ.149 ஆகும். இது 480பி ரெசல்யூஷனின் கீழ் வீடியோ தரத்தை வழங்குகிறது. இருப்பினும், இந்த திட்டம் ஒரு வீட்டிற்குள் ஒரு நேரத்தில் ஒரு மொபைல் அல்லது ஒரு டேப்லெட்டை என்கிற சிங்கிள் டிவைஸ் ஆதரவை மட்டுமே கொண்டுள்ளது.
நெட்பிளிக்ஸ் பேஸிக் திட்டத்தின் விலை மாதத்திற்கு ரூ.199 ஆகும். இது 720பி ரெசல்யூஷனின் கீழ் டிவி, லேப்டாப், மொபைல் மற்றும் டேப்லெட் டிவைஸ்களுக்கான ஆதரவை வழங்குகிறது. இருப்பினும், இந்த சாந்தாவின் கீழ் ஒரு வீட்டிற்குள் ஒரே நேரத்தில் ஒரு டிவைஸின் வழியாக மட்டுமே ஸ்ட்ரீமிங் செய்ய முடியும்.
நெட்பிளிக்ஸ் ஸ்டாண்டர்ட் திட்டத்தின் விலை மாதத்திற்கு ரூ.499 ஆகும். இது 1080பி ரெசல்யூஷனின் கீழ் டிவி, லேப்டாப், மொபைல் மற்றும் டேப்லெட் டிவைஸ்களுக்கான ஆதரவை வழங்குகிறது. இந்த சாந்தாவின் கீழ் ஒரு வீட்டிற்குள் ஒரே நேரத்தில் 2 டிவைஸ் வழியாக மட்டுமே ஸ்ட்ரீமிங் செய்ய முடியும்.
கடைசியாக உள்ள, நெட்பிளிக்ஸ் பிரீமியம் திட்டத்தின் விலை மாதத்திற்கு ரூ.649 ஆகும், இது 4கே ரெசல்யூஷன், ஸ்பேஷியல் ஆடியோ, ஒரே நேரத்தில் 4 டிவைஸ்களின் வழியாக ஸ்ட்ரீமிங் செய்யும் ஆதரவு, எந்த நேரத்திலும், எந்தவொரு கன்டென்ட்டையும் 7 டிவைஸ்களில் பதிவிறக்கம் செய்யும் ஆதரவு ஆகியவைகளை வழங்கும்.
இந்தாண்டு தொடக்கத்தில் அமெரிக்கா, கனடா, போர்ச்சுகல் மற்றும் அர்ஜென்டினாவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கான நெட்பிளிக்ஸ் சந்தா திட்டங்களின் விலைகள் திடீரெனெ உயர்தத்தப்பட்டதும் இங்கே குறிப்பிடத்தக்கது. கடந்த 2024 கிறிஸ்துமஸ் மற்றும் 2025 புத்தண்டு விடுமுறைக் காலத்தில், பிரபல ஓடிடி ஸ்ட்ரீமிங் தளமான நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் சந்தாதாரர்கள் தளமானது 18.9 மில்லியன் என்கிற அதிகரிப்பை கண்டு, மொத்தம் 302 மில்லியன் என்கிற உலகளாவிய சந்தாதாரர்களை எட்டியது.
இதற்கு லைவ் ஸ்ட்போர்ட்ஸ், ஸ்க்விட் கேம் சீசன் 2 போன்ற பிரபலமான நிகழ்ச்சிகள் காரணமாக இருந்துள்ளன. மேலும் நேரடியாக ஒளிபரப்பாகும் நிகழ்வுகளின் மீது நெட்பிளிக்ஸ் செய்த முதலீடுகள் ஆனது பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்தது. கடந்த நவம்பர் மாதம் ஜேக் பால் மற்றும் மைக் டைசன் இடையே நடந்த ஹெவிவெயிட் குத்துச்சண்டை போட்டி 65 மில்லியன் ஸ்ட்ரீம்களை ஈர்த்ததாக நெட்பிளிக்ஸ் கூறுகிறது. இதன் தொடர்ச்சியாகவே நெட்பிளிக்ஸ் இந்தியாவிற்குள் டபுள்யூடபிள்யூஇ ஸ்ட்ரீமிங்கை கொண்டுவந்துள்ளது என்பதில் சந்தேகமே வேண்டாம்.