ஏசியை கூலாக பராமரிக்கும் டிப்ஸ்!! கோடை வெயில்ல 'இதை' பண்றது முக்கியம்

10 hours ago
ARTICLE AD BOX

வெயில் காலத்தில் ஏசி கூலிங் ஆக இருக்க எப்படி பராமரிக்க வேண்டும் என்பதை குறித்து இங்கு காணலாம்.

Summer AC Maintenance Tips : கோடைகாலம் தொடங்கியாச்சு அடிக்கிற வெயிலில் தப்பிக்க ஏசியை தான் நாம் அனைவரும் நாடுகிறோம். அதுவும் குறிப்பாக சென்னை போன்ற நகரப்புரறங்களில் வெப்பத்தின் தாக்கம் ரொம்பவே அதிகமாக இருக்கும். எனவே ஏசியை முறையாக பராமரித்தால் மட்டுமே நீண்ட காலம் பயன் தரும். இல்லையெனில் அடிக்கடி பழுது பார்க்கும் நிலை ஏற்படும். இதனால் பணம் தான் வீணாக செலவழியும். எனவே கோடைகாலத்தில் உங்கள் வீட்டில் இருக்கும் ஏசியை முறையாக பராமரிக்க உதவும் 5 முக்கிய டிப்ஸ்கள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

1. ஏசி ஃபில்டரை சுத்தம் செய்!

ஏசி ஃபில்டரை சுத்தம் செய்வது ரொம்பவே முக்கியம். ஏனெனில் அழுக்கு மற்றும் தூசி ஏசி ஃபில்டரில் படிந்திருந்தால், அதன் குளிர்ச்சி திறன் குறைந்து போய்விடும். இது தவிர ஏசியின் உட்புற பாகங்களும் பழுதடைந்து விடும். எனவே இரண்டு வாரத்திற்கு ஒரு முறையாவது கண்டிப்பாக ஏசி பில்டரை கழற்றி சுத்தம் செய்யுங்கள். இப்படி செய்வதன் மூலம் ஏசியின் ஆயுள் காலம் நீண்ட நாள் நீடிக்கும் மற்றும் மின்சார பயன்பாட்டையும் குறைத்துவிடும்.

இதையும் படிங்க:  குளிர் டூ வெயில்.! ஏசியை நீண்ட நாட்களுக்கு பிறகு பயன்படுத்துவது எப்படி? நிபுணர்கள் கூறுவது என்ன.?

2. வெளிப்புற யூனிட்

ஏசியின் வெளிப்புற யூனிட் சுற்றி நல்ல காற்றோட்டம் இருக்க வேண்டும். முக்கியமாக அவற்றிற்கு அருகில் செடிகள் அல்லது வேறு ஏதேனும் பொருட்கள் இருந்தால் உடனே அப்புறப்படுத்தி விடுங்கள். இல்லையெனில் வெளிப்புற யூனிட்டில் இருந்து வெளியேறு வெப்பம் சரியாக வெளியேற முடியாமல் போகும். மேலும் இதனால் ஏசி நீண்ட நேரம் வேலை செய்ய வேண்டி இருக்கும். இது தவிர ஏசியின் பாகங்கள் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல், மின் கட்டணம் அதிகமாகும்.

இதையும் படிங்க:  AC ஏன் வெடிக்கிறது தெரியுமா..? இந்த விஷயங்களை செய்ங்க வெடிக்காது!

3. ஏசியின் கூலிங் காயில்

ஏசியின் கூலிங் காயில் மற்றும் கண்டன்சர் காயில் இவை இரண்டையும் வருடத்திற்கு ஒருமுறை கண்டிப்பாக சுத்தம் செய்ய வேண்டும். ஏனெனில் இவற்றில் படிந்திருக்கும் அழுக்கு ஏசியின் குளிர்ச்சித் திறனை குறைத்து விடும். அவற்றில் படிந்திருக்கும் அழுக்கை நீக்கினால் ஏசியின் குளிர்ச்சித் திறன் அதிகரிக்கும். முக்கியமாக இவற்றை நீங்களே சுத்தம் செய்ய வேண்டாம். ஏசியை சரி பார்ப்பவரை அனுகவும்.

4. இப்படி இருந்தால் ஆபத்து!

ஏசியில் இருந்து ஏதேனும் விசித்திரமான சத்தம் கேட்டால் அல்லது ஏசியில் இருந்து வரும் காற்று கூலிங்காக இல்லை என்றால் ஏசியை மெக்கானிக்கை உடனே அணுகுவது தான் நல்லது.  சிறிய பிரச்சனையை ஆரம்பத்திலேயே நீங்கள் சரி செய்து விட்டால் ஏசியில் பிரச்சனை வராது. ஒருவேளை நீங்கள் அலட்சியமாக இருந்தால் பழுது பார்க்க அதிக பணத்தை கொடுக்க வேண்டியிருக்கும்.

 

5. இதை மறக்காதே!

கோடை வெயில் முடிந்த பிறகு ஏசியை பயன்படுத்தாவிட்டால் அதை ஒரு கவர் போட்டு மூடி வைத்து விடுங்கள். அதுதான் நல்லது. இதனால் ஏசினுள் தூசி, அழுக்குகள் உள்ளே செல்வது தடுக்கப்படுவது மட்டுமின்றி, அடுத்த கோடை காலம் வரும் வரை ஏசி எந்தவித பாதிப்பும் இல்லாமல் இருக்கும்.

Read Entire Article