ஏ.ஆர். ரஹ்மான் உடல்நிலை குறித்துக் கேட்டறிந்த முதல்வர் ஸ்டாலின்

12 hours ago
ARTICLE AD BOX

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உடல்நிலை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்துள்ளார்.

இசையமைப்பாள ஏ.ஆர். ரஹ்மான் நேற்று லண்டனில் இருந்து சென்னை திரும்பிய நிலையில், இன்று அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, இன்று காலை 7.30 மணிக்கு அவரை சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர். அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் உடல்நிலை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்துள்ளார். இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தியறிந்தவுடன், மருத்துவர்களைத் தொடர்புகொண்டு அவரது உடல்நலன் குறித்துக் கேட்டறிந்தேன்!அவர் நலமாக உள்ளதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் தெரிவித்தனர்! மகிழ்ச்சி. என தெரிவித்துள்ளார்.

அதேபோல், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது சமூக ஊடகப்பக்கத்தில்,“உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் சார் விரைந்து பூரண நலம் பெற்று இல்லம் திரும்பிட விழைகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Read Entire Article