ஏ.ஆர்.ரஹ்மான் உடல்நிலை எப்படி இருக்கு… மகன் வெளியிட்ட பதிவு!..

16 hours ago
ARTICLE AD BOX

AR Rahman: பிரபல முன்னணி இசையமைப்பாளரான ஏ ஆர் ரகுமான் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் வெளியான நிலையில் அவருடைய மகன் ஏ.ஆர்.ஆர்.அமீன் உடல்நிலை குறித்து தெரிவித்திருக்கும் பதிவு வைரல் ஆகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முதல் திரைப்படத்திலேயே தேசிய விருதை வாங்கிய முக்கிய இசையமைப்பாளராக திகழ்ந்து வருபவர் ஏ ஆர் ரஹ்மான். அதைத்தொடர்ந்து அவருடைய சினிமா வாழ்க்கை ஏறுமுகமாக தான் அமைந்தது.

தமிழை தாண்டி பலமொழிகளில் இசையமைத்து வந்தார். ஒரு கட்டத்தில் ஹாலிவுட் திரைப்படத்திற்கும் இசையமைத்தது அதற்காக ஆஸ்கார் விருதையும் வாங்கி எல்லா புகழும் இறைவனுக்கே என தமிழ் மொழியை மிகப்பெரிய அரங்கில் பேசியதில் பெருமை கொண்டார். 

 

தற்போது வரை அவருடைய இசையில் வெளியாகும் படங்கள் அதற்காகவே சூப்பர் ஹிட் ஆவதும் வழக்கமாக இருக்கிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு தன்னுடைய மனைவியை பிரிவதாக அவர் தரப்பு அறிவிக்க ரசிகரிடம் மிகப்பெரிய அதிர்ச்சி உருவானது.

ஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடைய சினிமா வேலைகளில் படுபிஸியாக இருக்கிறார். இந்நிலையில் திடீரென நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியானது. அவருக்கு ஆஞ்சியோ கூட செய்யப்பட்டதாக தகவல்கள் கசிந்தது.

இந்நிலையில் அவர் மகன் ஏ.ஆர்.ஆர்.அமீன் கூறுகையில், என்னுடைய ரசிகர், நலம்விரும்பிகள் எல்லாருக்குமே உங்கள் வேண்டுதலுக்காக நன்றி. என்னுடைய அப்பாவிற்கு வேலை விஷயத்தால் நீர்சத்து குறைப்பாடு ஏற்பட்டது. இதனால் சாதாரண டெஸ்ட்டிற்காக மட்டுமே மருத்துவமனை சென்றார். 

 

தற்போது அவர் மிக நலமுடன் இருப்பதாகவும் உங்களுடைய அன்பிற்கும், ஆதரவிற்கும் நன்றிகள் என இன்ஸ்டாவில் பதிவிட்டு இருக்கிறார். இதை தொடர்ந்து மருத்துவமனை தரப்பில் இருந்து அவர் நலமுடன் இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

Read Entire Article