ARTICLE AD BOX
சென்னை: பிரபல பிரிட்டிஷ் பாடகர் எட் ஷீரனை வரவேற்று இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் வீடியோவை பகிர்ந்துள்ளார். எட்-ஷீரனின் இசை கச்சேரி சென்னை ஒய்.எம்.சிஏவில் நேற்று நடைபெற்றது. இதற்காக லண்டனிலிருந்து அவர் சென்னை வந்திருந்தார். முன்னதாக அவர் ஏ.ஆர்.ரஹ்மானை அவரது ஸ்டுடியோவில் சந்தித்தார். அப்போது ரஹ்மானின் மகன் அமீன் உடனிருந்தார். இது குறித்து ரஹ்மான் கூறும்போது, ‘எட் ஷீரன் இசை நிகழ்ச்சிக்காக சென்னை வந்திருப்பது பெருமையாக உள்ளது. அவரை அன்புடன் வரவேற்கிறேன். அவரை சந்தித்தபோது இசை பற்றி நிறைய பேசினோம்.
அதுவெல்லாம் மகிழ்ச்சியான தருணமாக அமைந்திருந்தது’ என்றார். எட்ஷீரனுடன் இணைந்து ரஹ்மானும் இசை நிகழ்ச்சி நடத்த வேண்டும் என நேற்று சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கோரிக்கை விடுக்க ஆரம்பித்தார்கள். இது கூட நல்ல ஐடியா, சீக்கிரமே நடக்கலாம் என எட்ஷீரன் தரப்பு தெரிவித்தது.