"எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம் மொழி" - முதல்வர் முக ஸ்டாலின் பதிவு

3 days ago
ARTICLE AD BOX

"எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம் மொழி" - முதல்வர் முக ஸ்டாலின் பதிவு

Chennai
oi-Pavithra Mani
Subscribe to Oneindia Tamil

சென்னை: உலக தாய்மொழி தினத்தையொட்டி, "எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம் மொழி" என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தமிழ் மொழி குறித்து எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் சர்வதேச தாய்மொழி தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு முதல்வர் முக ஸ்டாலின் எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம் மொழி என்றும், பிறமொழித் துணையின்றி தனித்து இயங்கும் ஆற்றல் கொண்ட செம்மொழி என்று எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

MK Stalin Mother language day Tamil

இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம் மொழி! இலக்கியங்களில் புதைந்திருந்த வரலாற்றினை மண்ணில் அகழாய்ந்து நிறுவி வருகிறோம்! அகத்திலும் புறத்திலும் அன்பும் வீரமும் கொண்டு வாழும் நற்றமிழர் தாய்மொழி, போற்றுதலுக்குரிய பழமை உடைய மொழி மட்டுமல்ல; பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்கும் ஆற்றல்கொண்ட செம்மொழி! உலகெங்கும் பரவட்டும் நம் உயர்தனிச் செம்மொழி! என்று பதிவிட்டுள்ளார்.

More From
Prev
Next
English summary
International Mother Language Day: Tamil Nadu Chief Minister Stalin said on the X site page that "Emmozhikum salaithadhalla em mozhi"
Read Entire Article