எம்.பி. சீட்டை குறைக்க பாஜக சதி! களமிறங்கும் தமிழ்நாடு! பின்னணியை உடைக்கும் ஜென்ராம்!

3 hours ago
ARTICLE AD BOX

நாடாளுமன்ற தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டால் தமிழ்நாட்டிற்கு எம்.பிக்களின் எண்ணிக்கை 31 ஆக குறைந்துவிடும் என்றும், இதன் காரணமாக இந்திய அளவில் சட்டம் இயற்றக்கூடிய நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறைந்துவிடும் என்றும்  மூத்த பத்திரிகையாளர் ஜென்ராம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.’

genramgenram

நாடாளுமன்ற தொகுதிகள் மறுவரையறையின் மோசமான பின்விளைவுகளையும், அதனால் தென் மாநிலங்களுக்கு ஏற்படும் ஆபத்துகள் குறித்தும் மூத்த பத்திரிகையாளர் ஜென்ராம் யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- மத்திய அரசு நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை 2026ஆம் ஆண்டில் செய்கிறது. அப்படி செய்யும்பட்சத்தில் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். அனைத்துக்கட்சி கூட்டம் மார்ச் 5ஆம் தேதி நடைபெற உள்ளது. தொடக்கத்தில் 500 இடங்கள் இருந்தது. பின்னர் படிப்படியாக அதிகரித்தது. ஒவ்வொரு முறையும் மக்கள் தொகை அடிப்படையில் தான் நாடாளுமன்ற தொகுதிகளை வரையறுகிறார்கள். 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பில் இறுதி செய்ததற்கு பின்னர் மத்திய அரசு மக்கள் தொகையை கட்டுப்படுத்த குடும்பக் கட்டுப்பாடு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. அதை உறுதியாக ஏற்றுக்கொண்டு செயல்படுத்திய மாநிலங்களுக்கு, பின்னாளில் நாடாளுமன்றத்தில் சட்டமன்றத்தில் இடங்கள் குறைந்துபோய் ஒரு தண்டனையாக இது வந்துவிடக்கூடாது என தென் மாநிலங்கள் காட்டிய எதிர்ப்பும், அழுத்தமும் தான் 1971-க்கு பிறகு  2026-க்கு பிந்தைய முதல் கணக்கெடுப்பின் அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகளை மறுவரையறை செய்து கொள்ளலாம் என 84-வது அரசியல் சட்டத் திருத்தத்துடன் அது நிறுத்தி வைக்கப்பட்டது.  புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டும்போது, பழைய நாடாளுமன்றத்தில் 543 பேருக்கு இடம் போதவில்லை. இங்கு ஆயிரம் பேர் இருக்கலாம் என்றெல்லாம் சொல்லி எம்.பி-க்களின் எண்ணிக்கையை 848 ஆக உயர்த்த வேண்டும் என்கிற முன்மொழிவை மத்திய பாஜக அரசு முன்வைக்கிறார்கள். அதுவும் மக்கள்த் தொகை அடிப்படையில் அதை கொடுப்பது என்றால், எந்த விதமாக விகிதாச்சாரத்தில் சமனிலை இருக்கும்.

7 மாநில இடைத்தேர்தலில் பாஜகவுக்கு பின்னடைவு

இப்போது தமிழகம், புதுச்சேரியை சேர்த்து 40 இடங்களும், உத்தரபிரதேசத்தில் 80 இடங்களும் உள்ளன. மக்கள் தொகை அடிப்படையில் மாற்றினால் தமிழ்நாட்டில் உள்ள 39 இடங்கள் 30 ஆகிவிடும். உ.பி.யில்  80 இடங்கள், 120 ஆகும். 80:40 என்பதற்கும், 120:30-க்கும் என்ன விதமான அரசியல் நிலைபாட்டை ஏற்படுத்தும் என்பதுதான் கேள்வி!. பாஜகவின் விதிகளின் படி உ.பி.க்கு 120 இடஙகள் தருவது தவறில்லை. ஆனால் இப்போது 2 தமிழ்நாடாக இருக்கின்ற உத்தரபிரதேசம், இந்த மாற்றங்களுக்கு பின்னர்  4 தமிழ் நாடாக இருக்கும் என்பது மிகப்பெரிய சமம் இன்மையை அளிக்கிறது. அல்லது வேறு வகையில் செய்தாலும் இதேதான் வரும். தற்போது இருக்கின்ற சமனிலை தொடராது. மத்திய அரசு மாநிலங்களுக்கு இடையே சமனிலை தொடர ஏதேனும் திட்டம் வைத்துள்ளனரா? அதற்கு தேவையான கருத்து ஒற்றுமையை ஏற்படுத்த எதிர்க்கட்சிகளுடன் பேசுகின்றனரா? என்றால், அதற்கான எந்த சுவடும் இல்லை. திடீரென ஒருநாள் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தது போல, இந்த அறிவிப்புகள் வரும் என தெரிகிறது. மத்திய அரசு ஏற்படுத்தியுள்ள நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை ஆணையம் இறுதியாக என்ன சொல்கிறதோ, அதுதான் இறுதியானது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் முடியாது என்று சொல்லப்படுகிறது. இவை எல்லாம்தான் கவலைக்குரியதாக உள்ளது. அபாயமான சூழலாகவும் உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதனை உரிய நேரத்தில் அனைத்துக்கட்சிகளுக்கும் நினைவூட்டி, அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டுகிறார் என்றுதான் நான் நினைக்கிறேன்.

ஜனநாயக முறையில் நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை செய்வதென்றால், மாநிலங்களுக்கு இடையே சமத்துவம் இருக்கும் விதமாக ஏதாவது ஒரு முறையை கொண்டுவர முயற்சிக்க வேண்டும். இல்லை என்றால் ஒட்டுமொத்தமாகவே 543 என்ற நிலையிலேயே தொடராலாம். இன்னும் 20 ஆண்டுகளுக்கு பிறகு 2047க்கு பிறகு மறுவரையறை செய்யலாம் என்று விட்டுவிடலாம். இதுபோன்று அவர்கள் முடிவு எதுவும் எடுப்பது போல தெரியவில்லை. இதில் பாஜகவினர் பகிரங்கமாக அரசியல் செய்கின்றனர். இதுபோன்று நாடாளுமன்ற தொகுதிகள் அதிகரிக்கும் இடங்கள் எல்லாம் பாஜக செல்வாக்கோடு இருக்கின்ற பகுதிகள் தான். அவர்களது கோட்பாடுகளை ஏற்க மறுக்கும் மக்கள், அங்கு கல்வி அதிகமாகியுள்ளது. மக்கள் தொகை குறைந்துள்ளது. வளர்ச்சி அதிகமாக இருந்துள்ளது. இந்த இடங்களில் எல்லாம் இப்படி ஒரு நிர்வாகத்தை நடத்தியதற்காக நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை தண்டனை அளிக்கிறது.

எண்ணிக்கையை குறைப்பது என்றால் ஏதோ திமுகவின் எம்.பி. எண்ணிக்கை குறைந்து விடும். அல்லது அதிமுக, காங்கிரஸ் எம்.பி-க்களின் எண்ணிக்கை குறைந்து விடும் என்பது கிடையாது. இந்திய அளவில் சட்டம் இயற்றக்கூடிய நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறைகிறது. 40 பேர் அங்கே சென்று என்ன செய்கிறாரகள்? கேண்டீனில் வடை சாப்பிடுகிறார்கள் என்று எந்த அக்கறையும் இல்லாமல் வாய்க்கு வந்ததை பேசக்கூடியவர்கள் இப்போதும் பேசுவார்கள். அது போன்று பேசவும் வாய்ப்பு உள்ளது. ஆனால் தமிழ்நாட்டினுடைய பிரதிநிதித்துவம் முற்றிலும் அங்கே குறைகிறது. இந்தியாவின் வளங்களை பகிர்வதில் என்ன பிரதிநிதித்துவம் உள்ளது? என்று அளவீடுகளை உள்ளே கொண்டு வந்தார்கள் என்றால் அப்போது வளங்களை பகிர்ந்து கொள்வதில் தமிழ்நாட்டின் பங்கு குறைகிறது. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற இந்திய அரசின் கோட்பாட்டை சிரமேற்கொண்டு செய்ததற்கு தண்டனையா? என்கிற கேள்வியும் எழுகிறது. நீங்கள் வளர்ந்துவிட்டீர்கள். வளர்ச்சி அடையாத பிள்ளைகளுக்கு தானே ஒரு தாய் முதலில் கவனிக்க வேண்டும், என்று எடுத்துக்காட்டை சொல்லி சொல்லி. தென் மாநிலங்களுக்கு வர வேண்டிய நியாயமான அளவு நிதியைக்கூட, வேறு மாநிலங்களுக்கு உதவுகிறோம் என்கிற பெயரில் அவர்கள் கொடுத்துக் கொண்டிருப்பதை இது நிலைநிறுத்தும். எப்போதும் இப்படியே நீடிக்க செய்வதற்கான ஒரு ஏற்பாடாகவும் இது அமைந்துவிடும்.

திமுக கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றி சாத்தியமா?- தராசு ஷியாம் விளக்கம்

இது தவிரவும் தமிழ்நாட்டை பாதிக்கக்கூடிய முக்கியமான பிரச்சினைகள் இருக்கிறது. தமிழ்நாடு விரும்பாத விஷயங்களில், திட்டங்களில் விதி விலக்கு அளிக்க வேண்டும். நீட், கியூட் போன்ற விஷயங்களை தமிழ்நாடு ஏற்கவில்லை என்றால், அதற்கு விலக்கு அளிக்க வேண்டும். நிதிப் பகிர்வில் ஒரு நியாயமான முடிவை நிதி ஆணையம் அளிக்க வேண்டும். செஸ் போன்ற பகிர்ந்து கொள்ள முடியாத வரிகளை திருத்தி அமைக்க வேண்டும். இப்படி பல்வேறு கோரிக்கைகள் மாநிலத்தின் கோரிக்கையாக உள்ளது. மாநிலங்களின் கடன் வாங்கும் உரிமைகளையும் நசுக்கும் விதமாக, மாநில பொதுத்துறைகளின் கடன்களையும் சேர்த்துள்ளது பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் கேரள அரசு பாதிக்கப்பப்பட்டுள்ளது. மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையில் தீர்க்கப்படாத அரசியலை ஒட்டி, பாஜக ஆட்சியாக இருந்தால் ஒரு அணுகுமுறையும், எதிர் அணியின் ஆட்சியாக இருந்தால் வேறு அணுகுமுறையும் என அரசமைப்பு சட்டத்திற்கு மாறாக மத்திய அரசு வைத்திருக்கக்கூடிய சூழலில் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள், அதற்கு எதிராக மக்களை ஒன்று திரட்டுகிற வேலையை தவிர வேறு வாய்ப்பு இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. அதன் எதிராலியாகத்தான் அனைத்து மக்களின் பிரதிநிதிகளாக, அனைத்துக்கட்சி கூட்டத்தை முதலமைச்சர் கூட்டியுள்ளார், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Read Entire Article