எப்போதான் சார் அந்த மதுரை எய்ம்ஸ் பணிகள் முடியும்? இதுவரை எவ்வளவு பணிகள் நடந்துள்ளது?

3 days ago
ARTICLE AD BOX

எப்போதான் சார் அந்த மதுரை எய்ம்ஸ் பணிகள் முடியும்? இதுவரை எவ்வளவு பணிகள் நடந்துள்ளது?

Madurai
oi-Yogeshwaran Moorthi
Subscribe to Oneindia Tamil

மதுரை: 2019ஆம் ஆண்டு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில், இதுவரை திறக்கடவில்லை. இந்த நிலையில் மதுரை மக்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பான எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் எவ்வளவு முடிந்துள்ளது, எப்போது முழுமையாக நிறைவடையும் என்பது தெரிய வந்துள்ளது.

2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக மதுரையில் பிரதமர் நரேந்திர மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். இதன்பின் நீண்ட நாட்களாக எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் தொடங்கப்படாமல் இருந்த நிலையில், 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது உதயநிதி ஸ்டாலின் செங்கல்லை வைத்து செய்த பிரச்சாரம் மிகப்பெரிய விவாதத்தை உருவாக்கியது.

Madurai AIIMS Hospital

இதனிடையே மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. ஓராண்டுக்கும் மேலாக எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் நடந்து வரும் நிலையில், எப்போது முடிவடையும் என்பதே மதுரை மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை முதன்மை இயக்குநர் ஹனுமந்த ராவ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை முதல்கட்ட பணிகளில் கல்வி வளாகம், வெளி நோயாளிகளுக்கான மருத்துவ சேவைகள், மாணவர்களுக்கு விடுதிகள், அத்தியாவசிய மருத்துவ சேவை கட்டிடங்கள் உள்ளிட்ட முக்கிய கட்டிடங்கள் உருவாக்கப்பட்டு வர்கிறது. இந்த பணிகள் 18 மாதங்களில் முடிவடையும் என்று எதிர்பார்க்கிறோம். ஜனவரி மாத நிலவரத்தின்படி முதற்கட்ட கட்டுமான பணிகள் 24 சதவிகிதம் நிறைவடைந்துள்ளது.

தற்போது இரண்டாவது கட்டத்தில் மூதமுள்ள உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மொத்தமாக கட்டுமான திட்டத்தை 2027ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது இன்னும் 33 மாதங்கள் முடியும். மொத்த கட்டுமான பணிகளில் 14.5 சதவிகிதம் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 900 படுக்கைகள், 150ன்படுக்கைகள் பிரத்யேகமாக தொற்று நோய்-க்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் கல்வி வளாகம், மருத்துவமனை வளாகம், விடுதி, குடியிருப்பு வளாகம், விளையாட்டு வசதிகள் மற்றும் 750 இருக்கைகள் கொண்ட கலையரங்கம் அமைக்கப்படும். மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் பணி சேர்க்கையும் நடக்கிறது. அதேபோல் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் தற்காலிகமாக செயல்படும் மதுரை எய்ம்ஸ் கல்லூரி, நடப்பாண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மதுரை எய்ம்ஸ் கல்லூரியின் நிரந்தர வளாகத்திற்கு மாற்ற முயற்சி நடக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
English summary
Madurai AIIMS Hospital construction work to be completed by 2027 February
Read Entire Article