என்றும் இளமையாக இருக்க…

8 hours ago
ARTICLE AD BOX

நமக்கு வயது ஆக ஆக, முதுமையின் அறிகுறிகள் நம் உடலில், குறிப்பாக முகத்தில் தோன்ற ஆரம்பிக்கின்றன. முதுமை நம்மை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்படையச் செய்கிறது. நாம் இந்த வயதான அறிகுறிகளை மறைப்பதற்குப் பதிலாக, அவற்றைக் குறைப்பதில் கவனம் செலுத்த வேண்டும். இதற்கு முறையான வாழ்க்கை முறையை கடைபிடிப்பது மிகவும் முக்கியமாகும்.

இயற்கையான வயதை விட இளமையாக தோற்றமளிக்க இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவது அவசியம். இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்போது நமது உடலில் வயதாவதன் அறிகுறிகள் அதிகமாகத் தெரியும். மேலும் நாம் இன்சுலின் எதிர்ப்பு சக்தியுடன் இருக்கும்போது நமது உடலில் முதுமை வேகமாக நிகழ்கிறது. இதனுடன் உடலில் நச்சுகளும் அதிகரிக்கத் தொடங்குகின்றன. மேலும் இது வேகமாக வயதான தோற்றம் ஏற்படுவதற்கும் வழிவகுக்கிறது. எனவே 40 வயதுக்கு பிறகு இனிப்புகளை குறைவாக சாப்பிட வேண்டும்.

நம்முடைய மோசமான குடல் ஆரோக்கியம் நமக்கு முன்கூட்டிய முதுமையை வரவேற்கும். இதனால், செரிமானம் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்களை உறிஞ்சுதல் பாதிக்கப்படுகிறது. நமது குடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும் உணவுகளை தவிர்த்து, எளிதில் செரிக்கும் உணவுகளை உண்பதன் மூலம் குடலை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும். உணவில் எண்ணெய், நெய் போன்றவற்றை குறைவாக சேர்த்துக் கொள்ளும்போது நம் உடலில் கொழுப்பின் அளவு குறைகிறது. இதனால் நமக்கு உயர் இரத்த அழுத்த கோளாறு வருவதற்கான வாய்ப்புகளும், இதயநோய் தொடர்பான ஆபத்துகளும் குறைகின்றன.

முதுமை காலத்தில் போதுமான நீரேற்றம் நமது உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கு மிகவும் அவசியமானது ஆகும். வயதாகும்போது, உடலில் போதுமான நீரேற்றம் இல்லாமல் போனால், உடல்நலப் பிரச்சினைகள் மற்றும் இறக்கும் அபாயங்கள் அதிகமடையலாம். நம் உடலில், சிறுநீரகம், தோல், தசை மற்றும் மூளை போன்ற உறுப்புகள் செயல்பட சரியான அளவு நீர் நம் உடலுக்கு தினமும் முக்கியமாகும். நீரேற்றம் உடலின் வெப்பநிலையை சீராக வைத்திருக்கவும், சருமத்தை மென்மையாகவும், புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கவும் உதவுகிறது. சோர்வு மற்றும் தலைவலி போன்றவற்றையும் தடுக்கிறது.

முதுமை காலத்தில் நீரேற்றத்தை தவிர்க்க தினமும் 2 முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் குடிக்கலாம். மேலும், பழச்சாறுகள், தேநீர், காபி போன்ற திரவங்களையும் குடிக்கலாம். கீரை, வெள்ளரி, தர்பூசணி போன்ற நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளுவது நல்லது.

சில மருந்துகள் நீரேற்றத்தை பாதிக்கலாம். எனவே, மருத்துவரின் ஆலோசனையின் பேரிலேயே புதிய மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதிக தாகம், தலைவலி, சோர்வு, உலர்ந்த வாய் போன்றவை நீரிழப்பின் அறிகுறிகளாகும். இவற்றை உணர்ந்தால் முதியவர்கள் உடனடியாக மருத்துவரை அணுகவேண்டும். உடலில் நீர்ச்சத்து இல்லாமல் இருந்தால் தோலில் வறட்சி, முக பருக்கள், சுருக்கங்கள் ஏற்படுகின்றன. எனவே போதுமான அளவு தண்ணீரை தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள்:
இளமை காக்கும் இயற்கை அமுதம் இதுதாங்க!
Healthy life

நாம் மேற்கொள்ளும் 12 முதல் 14 மணிநேரம் வரையிலான உண்ணாவிரதம் உடல் நச்சுத்தன்மையை வெளியேற்றுவதுடன் உடலுக்கு பல நன்மைகளையும் தருகிறது. புதிய செல்களை உருவாக்கவும் உதவுகிறது. இதன் காரணமாக உடலில் இருந்து நச்சுகள் அகற்றப்பட்டு வயதான அறிகுறிகள் நம் உடலில் விரைவில் தோன்றுவதை தடுக்க உதவுகிறது.

முறையான உணவு, தினசரி உடற்பயிற்சி, போதுமான உறக்கம் போன்றவை நாம் விரைவில் முதுமை அடைவதிலிருந்து தடுக்கின்றன. இவை நமது மன அழுத்தத்தையும் குறைக்கின்றன. இவற்றை உணர்ந்து இனியேனும் நமது அன்றாட வாழ்வில் தேவையான மாற்றங்களை செய்வோம். அவ்வாறு, நாம் வாழ முனைந்தால் முதுமையிலும் இளமையுடன் நம்மால் இருக்க முடியும்.

இதையும் படியுங்கள்:
இளமை வேண்டுமா? அப்ப இத கவனிக்க வேண்டுமே!
Healthy life
Read Entire Article