தென்னிதிய திரையுலகின் முன்னணி நடிகையாகவும், லேடி சூப்பர் ஸ்டார் என்றும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நயன்தாரா, இனிமேல் தன்னை ரசிகர்கள் நயன்தாரா என்று அழைத்தால் மட்டும் போதும், என அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது, "என் அன்பு ரசிகர்கள், மதிப்பிற்குரிய ஊடக நண்பர்கள் மற்றும் திரைப்பட குடும்பத்தினருக்கு வணக்கம்.

நான் ஒரு நடிகையாக பயணித்து வரும் இந்த பாதையில் மகிழ்ச்சி மற்றும் வெற்றியின் அனைத்து ஆதாரங்களுக்கும், மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கடிதம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினரும், ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சி உடனும் இருப்பீர்கள் என்பதற்கான எண் உள்ளார்ந்த ஆசையாக இருக்கட்டும்.

என் வாழ்க்கை எப்போதும் ஒரு திறந்த புத்தகமாகவே இருந்துள்ளது. உங்கள் நிச்சயம் அற்ற அன்பும் ஆதரவும் தான் அதை அழகு சேர்த்துள்ளது. என் வெற்றியின் போது, என்னை தோளில் சாய்த்து பாராட்டியதோடு கடினமான தருணங்களில் என்னை தூக்கி நிறுத்தவும் நீங்கள் எப்போதும் இருந்தீர்கள்.

நீங்கள் பலரும் என்னை லேடி சூப்பர் ஸ்டார் என்று அன்புடன் அழைத்து, வாழ்த்தி இருக்கிறீர்கள். உங்கள் பேராதரவால் உருவான இந்த பட்டத்திற்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால் இனிமேல் என்னை நயன்தாரா என்று அழைக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் என் பெயர் தான் எனக்கு மிகவும் நெருக்கமான ஒன்று. அது என்னை மட்டும் குறிக்கிறது. ஒரு நடிகையாக மட்டுமல்ல ஒரு தனி நபராகவும், பட்டங்களும் விருதுகளும் மதிப்பு மிக்கவை தான் ஆனால் சில சமயங்களில் அவை நம்மை நம் வேலையில் இருந்து நாம் கலைத்தொழிலிலிருந்து, உங்கள் அன்பான தொடர்பில் இருந்து பிரிக்கக்கூடும்.

நாம் அனைவரும் பகிர்ந்து கொள்ளும் அன்பின் மொழி நம்மை எல்லா எல்லைகளையும் கடந்து இணைத்து இருக்கிறது. எதிர்காலம் எதை கொண்டு வந்தாலும் உங்கள் ஆதரவு என்றும் மாறாது என்பதை தெரிந்து கொள்வதில் எனக்கு பேரானந்தம். அதே சமயம் உங்கள் அனைவரையும் மகிழ்விக்க என் கடின உழைப்பு தொடர்ந்து இருக்கும். சினிமா தான் நம்மை ஒன்றாக இணைக்கிறது. அதை நாம் எல்லோரும் சேர்ந்து கொண்டாடிக் கொண்டே போகலாம். அன்பும் மரியாதையுடன் நன்றி. என நயன்தாரா தன்னுடைய அறிக்கையில் கூறியுள்ளார்.