ARTICLE AD BOX
என்னது பிளாஸ்டிக் பனிக்கட்டியா! தண்ணீரின் புதிய வடிவத்தைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகள்
செய்தி முன்னோட்டம்
பிளாஸ்டிக் பனி VII" எனப்படும் நீரின் ஒரு புதிய நிலையை ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.
இது மற்ற கிரகங்களில் தீவிர நிலைமைகளின் கீழ் இருக்கக்கூடும். சோதனைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட இந்தக் கண்டுபிடிப்பு, தத்துவார்த்த கணிப்புகளுடன் ஒத்துப்போகிறது மற்றும் பூமிக்கு அப்பால் உள்ள நீரின் செயல்பாடு பற்றிய புதிய கண்டுபிடிப்புகளுக்கு அடிப்படையாக மாறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரான்சின் இன்ஸ்டிட்யூட் லாவ்-லாங்கேவின் ஒரு குழு, தண்ணீரை பூமியின் வளிமண்டல அழுத்தத்தை விட தோராயமாக 60,000 மடங்கு, அதாவது ஆறு ஜிகாபாஸ்கல்கள் அளவிற்கு மிகப்பெரிய அழுத்தத்திற்கு உட்படுத்தி, -327°C க்கு குளிர்விப்பதன் மூலம் பிளாஸ்டிக் பனி VII ஐ வெற்றிகரமாக உருவாக்கியது.
இந்த சோதனை அணு இயக்கங்களை பகுப்பாய்வு செய்ய அரை-மீள் நியூட்ரான் சிதறலை (QENS) பயன்படுத்தியது.
பிளாஸ்டிக் பனி
பிளாஸ்டிக் பனிகளின் தனித்துவமான தன்மை
வழக்கமான பனிக்கட்டியைப் போலல்லாமல், பிளாஸ்டிக் பனி VII தீவிர நிலைமைகளின் கீழ் உருவாகிறது மற்றும் தனித்துவமான அணு செயல்பாட்டைக் காட்டுகிறது.
கட்டமைப்பிற்குள் உள்ள ஹைட்ரஜன் அணுக்கள் முன்னர் கணிக்கப்படாத வழிகளில் நகரும். இது நீரின் மூலக்கூறு இயக்கவியல் குறித்த தற்போதைய கோட்பாடுகளுக்கு ஒத்துபோகமால் வேறுவிதமாக இயங்குகின்றன.
இந்த முன்னேற்றம் கிரக அறிவியலில் உயர் அழுத்த நீர் கட்டங்கள் பற்றிய நமது புரிதலை மறுவரையறை செய்யக்கூடும்.
இந்த கண்டுபிடிப்பின் தாக்கங்கள், பனிக்கட்டி நிலவுகள் அல்லது நீர் நிறைந்த கிரகங்களின் ஆழத்தில் இதே போன்ற நிலைமைகள் இருக்கக்கூடும் என்பதால், கிரக ஆராய்ச்சிக்கும் பயன்படுத்தப்பட உள்ளன.
இந்த ஆய்வு எதிர்கால விண்வெளி ஆய்வு மற்றும் வேற்று கிரக வாழ்க்கையைத் தேடுவதற்கான முக்கியமான தரவை வழங்குகிறது.