ARTICLE AD BOX
IPL 2025 Advertising Rules and Restrictions: மத்திய சுகாதாரத் துறை ஐபிஎல்-க்கு (IPL 2025) நிறைய கட்டுப்பாடுகள் விதித்திருக்கிறது. இந்த டி-20 கிரிக்கெட் (T-20 Cricket) போட்டியில சில விதிமுறைகளை கண்டிப்பா பின்பற்ற வேண்டும் என்று பிசிசிஐக்கு (BCCI) அறுவுறுத்தப்பட்டியிருக்கிறது. இந்த முறை சில பொருட்களின் விளம்பரத்துக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக லாபம் குறையவும் வாய்ப்பிருக்கிறது.
மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை ஐபிஎல் சேர்மன் அருண் சிங் தூமல் மற்றும் பிசிசிஐ-க்கு (BCCI) ஒரு கடிதம் எழுதியிருக்கிறது. அதில் புகையிலை மற்றும் மதுபான விளம்பரங்களை ஐபிஎல்-ல தடை செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்காங்க. அது மட்டும் இல்லாமல், இந்த ரெண்டு பொருட்கள் தொடர்புடைய மற்ற விளம்பரங்களையும் தடை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விராட் கோலிக்கு பிடித்த மேரி பிஸ்கட்: எதுக்கு, ஏன் தெரியுமா?
மத்திய சுகாதாரத் துறையின் டைரக்டர் ஜெனரல் அதுல் கோயல் அந்த கடிதத்துல, விளையாட்டு மைதானம் மற்றும் ஐபிஎல் சம்பந்தப்பட்ட எல்லா நிகழ்ச்சியிலயும் இந்த மாதிரி பொருட்களோட விளம்பரத்தை தடை செய்யணும்னு சொல்லியிருக்காரு. அதுமட்டுமில்லாம, வர்ணனையாளர்களும் இந்த மாதிரி எந்த பொருளையும் விளம்பரப்படுத்த கூடாதுன்னு சொல்லியிருக்காங்க. ஸ்டேடியம் மற்றும் ஐபிஎல் விளையாட்டு நடக்கிற இடத்துல புகையிலை மற்றும் மதுபான விளம்பரங்களை ஒளிபரப்ப தடை விதிக்கணும்னு சொல்லியிருக்காங்க (Indian Premier League 2025).
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவா? மனம்திறந்து பேசிய ரோகித் சர்மா, விராட் கோலி!
அதுமட்டுமில்லாம, புகையிலை மற்றும் மதுபானம் தொடர்புடைய விளம்பரத்தில் நடித்திருக்கும் முன்னாள் வீரர்களையும் அதிலிருந்து விலக வைக்க வேண்டும். சுகாதாரத் துறை என்ன சொல்லுதுன்னா, நிறைய இளைஞர்கள் கிரிக்கெட் ரசிகர்களாக இருக்கிறார்கள். அவர்களில் ஏராளமானோர் கிரிக்கெட் வீரர்களோட வாழ்க்கையை பின்பற்ற நினைக்கிறார்கள். அதனால் விளையாட்டு மைதானம் ஒரு முக்கியமான சமூக கருத்தை சொல்லும் இடமாக இருக்க வேண்டும்.
அதனால, இளைஞர்களின் உடல் நலத்திற்கு கேடு விளைவிப்பது போன்று எதுவும் இருக்க கூடாது. ஏனென்றால், நம் நாட்டில் வருஷத்துக்கு சுமார் 14 லட்சம் பேர் புகையிலை பழக்கத்தினால் இறந்து போறாங்க. இதில் இந்தியா 2ஆவது இடத்தில் இருக்கிறது. அதுமட்டுமில்லாம, மதுபானத்தால நிறைய பேரு உடம்பு சரியில்லாம போறாங்க, நிறைய பேரு இறந்து போறாங்க. புகையிலை மற்றும் மதுபானத்தால கேன்சர், நுரையீரல் பிரச்சனை, சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் வருது. இதையெல்லாம் மனதில் வைத்து இந்த தடவை ஐபிஎல் தொடரில் நிறைய தடைகளும், கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருக்கிறது.
சாம்பியன் இந்திய அணிக்கு பரிசுத்தொகை எவ்வளவு? மற்ற அணிகளுக்கு எவ்வளவு கிடைக்கும்?