நாக்கில் எச்சில் ஊற வைக்கும் கோவை ஸ்டைல் ஸ்பெஷல் தக்காளி பஜ்ஜி

3 hours ago
ARTICLE AD BOX

கொங்குநாட்டு சமையல் எப்பவுமே தனித்துவமான சுவை, ஊட்டச்சத்து மற்றும் பாரம்பரிய நுட்பங்களை கொண்டதாகும். அதில் மிகச் சிறப்பான மற்றும் மிகவும் வித்தியாசமான ஒரு உணவு தான் தக்காளி பஜ்ஜி. பெயரில் மட்டுமல்ல இதன் சுவையும் வித்தியாசமானது தாவ். இது கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர் போன்ற கொங்குநாட்டு பகுதிகளில் பிரபலமானது. இந்த காரமான, சற்றே புளிப்பான சுவை கொண்ட பஜ்ஜி சாதத்திற்கும், இட்லிக்கும், தோசைக்கும், ரொட்டிக்கும் மிகச் சிறந்த சைட் டிஷ்ஷாக அமையும்.

தேவையான பொருட்கள் :

தக்காளி – 5 (நன்கு பழுத்து இருக்க வேண்டும்)
பச்சை மிளகாய் – 2
பெரிய வெங்காயம் – 2 (நறுக்கியது)
பூண்டு – 5 பல் (நறுக்கியது)
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு

மசாலா சேர்க்க வேண்டியவை :

மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
கொத்தமல்லித்தூள் – 1/2 டீஸ்பூன்
சோம்புத்தூள் – 1/2 டீஸ்பூன்  (தேவைப்பட்டால்)
மிளகு தூள் – 1/2 டீஸ்பூன்

பெண்களே உஷார்...உணவு பழக்கத்தை சாதாரணமாக நினைக்காதீங்க

தாளிக்க வேண்டிய பொருட்கள்

நல்லெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 1/2 டீஸ்பூன்
கடலை பருப்பு – 1 டீஸ்பூன் (விருப்பப்பட்டால்)
சோம்பு – 1/2 டீஸ்பூன்

செய்முறை : 

- தக்காளிகளை சிறிய துண்டுகளாக நறுக்கவும்.
- மிக்ஸியில் மென்மையாக அரைக்கலாம் அல்லது கரண்டியால் மசித்து விடலாம். ஆனால் மிதமான குழம்பு பதமாக இருக்க வேண்டும்.
- கடாயில் நல்லெண்ணெய் சேர்த்து சூடாக்கவும்.
- அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலை பருப்பு, சோம்பு சேர்த்து தாளிக்கவும்.
- வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து பழுப்பாகும் வரை வதக்கவும்.
- வதக்கிய வெங்காயத்தில் தக்காளி விழுது / மசித்த தக்காளி சேர்க்கவும்.
- பின்னர் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கொத்தமல்லித்தூள், மிளகு தூள், சோம்புத்தூள் சேர்த்து நன்றாக கிளறவும்.
- 5 முதல் 7 நிமிடம் வரை மிதமான தீயில் வேக விடவும் . இதனால் தக்காளியின் புளிப்பு சரியாகவும், மசாலா கலந்து சுவை மாறாமல் இருக்கும்.
- உப்பு சேர்த்து கிளறி, மேலும் 2 நிமிடம் சமைக்கவும்.
- இறுதியாக கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி, தீயை அணைக்கவும்.
- இதை 5 நிமிடங்கள் மூடி வைத்து வைத்து விடுங்கள்.
- வெறும் சாதத்துடன் இந்த பஜ்ஜி சிறந்த விருந்தாக இருக்கும்.
- கம்பு களி, இட்லி, தோசை, அப்பம் போன்றவற்றுடன் பரிமாறலாம்.
- பரோட்டா, பூரி, சப்பாத்தி போன்றவற்றுடன் சைட் டிஷ்ஷாக இதை பரிமாறலாம்.

காளான் சாப்பிட்டால் உடல் எடை குறையும்...எப்படின்னு தெரியுமா?

சுவையை அதிகரிக்க :

- வழக்கமான தக்காளிக்கு பதிலாக நாட்டு தக்காளி பயன்படுத்தினால், அதிக புளிப்பு சுவை கிடைக்கும்.
- தேங்காய் துருவல் சிறிது சேர்த்தால், இது மிக சிறந்த கிரேவியாக மாறும்.
- சோம்பு சேர்ப்பதால், பஜ்ஜிக்கு புளிப்பு மட்டும் இல்லாமல் கொஞ்சம் இனிப்பு மற்றும் கமகமக்கும் மணம் இருக்கும்.
- மிதமான தீயில் மட்டுமே சமைக்கவும் . இல்லை என்றால், தக்காளியின் இயற்கை சுவை போய்விடும்.
- அதிக காரம் விரும்பினால், லேசான மிளகாய் தூள் அல்லது பச்சை மிளகாய் அதிகமாக சேர்க்கலாம்.

Read Entire Article