என்னதான் ஃபைனல் போனாலும்.. இந்திய அணி இதை கட்டாயம் மிஸ் பண்ணும் – பாக் பசித் அலி பேட்டி

3 hours ago
ARTICLE AD BOX

துபாயில் சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடர் விளையாடி வரும் இந்திய அணி கடைசி மற்றும் இறுதிப் போட்டியாக வருகிற ஞாயிற்றுக்கிழமை நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் விளையாட உள்ளது.

இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் பசித் அலி இந்திய வீரர்கள் இந்த விஷயத்தை மிஸ் செய்வார்கள் என சில கருத்துக்களை பேசி இருக்கிறார்.

சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடர்

இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் விளையாட மறுத்ததை அடுத்து இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் ஒப்புதல் பெயரில் துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு மாற்றப்பட்டது. முதல் போட்டியிலிருந்து இறுதிப்போட்டி வரை இந்திய அணி ஒரே மைதானத்தில் விளையாடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விளையாடிய அனைத்து போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தற்போது இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாட உள்ளது. இந்த சூழ்நிலையில் நியூசிலாந்து அணி கடந்த அரை இறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக அதிரடியாக விளையாடி 362 ரன்கள் குவித்தது. இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் பசித் அலி இந்திய வீரர்கள் பாகிஸ்தானில் விளையாடியிருந்தால் பெரிய ஸ்கோர்களை அடித்திருக்க முடியும் என்று சில முக்கிய விஷயங்களை பேசி இருக்கிறார்.

இந்திய அணி மிஸ் பண்ணும்

இதுகுறித்து அவர் கூறும் போது “நியூசிலாந்து அணி டாஸ் வென்று 362 ரன்கள் குவித்தது என்பதை ஒப்புக்கொள்கிறேன். கடைசி பத்து ஓவர்களில் மட்டும் அவர்கள் 110 ரன்கள் குவித்தார்கள். கடாபி ஆடுகளம் எவ்வளவு சிறப்பானது என்று பிலிப்ஸ் மற்றும் மிட்சல் ஆகியோர் காட்டினார்கள். இந்திய பேட்ஸ்மேன்கள் இதை கட்டாயம் மிஸ் பண்ணுவார்கள். அவர்களிடம் இருக்கும் ரோஹித் சர்மா, கில், விராட், ஸ்ரேயாஸ் ஐயர் இந்த நான்கு பேர் களமிறங்கினால் 200 ரன்கள் வரை நிச்சயமாக எடுக்க முடியும். ஐசிசி போட்டி நடக்கும்போதெல்லாம் ரவீந்திரன் ஒரு ஹீரோவாக மாறுகிறார்.

இதையும் படிங்க:கோலி நம்புற மாதிரி ஒருத்தர் இருந்தா.. இந்த விஷயத்தை கட்டாயம் செய்வார் – முன்னாள் ஆர்சிபி வீரர் பேட்டி

அவர் இந்த தொடரில் இரண்டாவது ஆக சதம் அடித்திருக்கிறார். அவர் மிக சிறப்பாக பேட்டிங் செய்தபோது அவரது சகோதரரான வில்லியம்சன் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி இருக்கிறார். வில்லியம்சன் ரவீந்திரனை விளையாட வைத்த விதத்தைப் பார்க்கும்போது அற்புதமாக இருந்தது. மார்க்ரம் பந்து வீசும் போது ரவீந்திரனை பேக் புட்டில் விளையாட வைத்தது சிறப்பான விஷயமாகும்” என்று பசித்தாலே பேசி இருக்கிறார்.

The post என்னதான் ஃபைனல் போனாலும்.. இந்திய அணி இதை கட்டாயம் மிஸ் பண்ணும் – பாக் பசித் அலி பேட்டி appeared first on SwagsportsTamil.

Read Entire Article