இந்திய அணி செஞ்ச தவறை எல்லாம் கவனிச்சோம்.. அதனால இந்த முறை மிஸ் ஆகாது – நியூசி கேப்டன் சவால்

3 hours ago
ARTICLE AD BOX

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டி வருகிற ஞாயிற்றுக்கிழமை துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்த சூழ்நிலையில் நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்சல் சான்ட்னர் இறுதிப் போட்டியில் இந்திய அணியை எதிர்கொள்ளும் விதம் குறித்து சில முக்கிய கருத்துக்களை பேசி இருக்கிறார்.

இந்தியா நியூசிலாந்து பைனல்

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் முதல் அரை இறுதி ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அதேபோல நேற்று நடைபெற்ற இரண்டாவது அரை இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணி தென்னாப்பிரிக்க அணியை 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இரண்டாவது அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது. இந்த தொடரை பொருத்தவரை இரண்டு வலிமையான அணிகள் என்று கூறினால் அது இந்தியாவும் நியூசிலாந்து அணிகள் தான் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

ஏனென்றால் பேட்டிங்,பந்துவீச்சு, ஃபீல்டிங் என அனைத்திலும் சரி சமமாக உள்ள இரண்டு அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடுவது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் துபாய் ஆடுகளத்திற்கு புதிதான நியூசிலாந்து அணி இந்திய அணிக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வி அடைந்திருந்தாலும் தான் செய்த தவறுகளை திருத்திக் கொண்டு முன்னேறுவதில் சிறந்த அணியான நியூசிலாந்து அணி இந்த முறை இந்திய அணிக்கு கடும் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தோல்வியில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்

மேலும் துபாய் ஆடுகளம் மெதுவாக காணப்படுவதால் டாஸ் வென்று எந்த அணியாக இருந்தாலும் பேட்டிங் செய்ய முதலில் விரும்பும். இந்த சூழ்நிலையில் நியூசிலாந்து அணியின் கேப்டன் சான்ட்னர் இந்த முறை இந்திய அணியை எதிர்கொள்வதில் மிகுந்த ஆர்வத்தோடு இருப்பதாக சில முக்கிய விஷயங்களை கூறியிருக்கிறார். அதாவது தங்களது வேக பந்துவீச்சு இந்திய அணியின் டாப் ஆர்டரை வீழ்த்தி இருக்கிறது எனவும், மேலும் தோல்வி அடைந்ததற்கான பாடங்களை கற்றுக்கொண்டு முன்னேருவோம் என சில விஷயங்களை பேசி இருக்கிறார்.

இதையும் படிங்க:2 சிக்ஸ் அடிச்சாதான் ஜெயிக்க முடியும்.. அப்ப கூட எனக்கு இதை நினைச்சு சிரிப்புதான் வந்தது – ஹர்திக் பாண்டியா சுவாரஸ்யம்

இது குறித்து அவர் கூறும் போது “துபாயிலிருந்து பந்து வீசும் போது இந்திய அணி அழுத்தத்தில் இருந்தது எங்களுக்கு பெரிய நம்பிக்கையை கொடுத்தது. எனவே அந்த ஆடுகளத்தை பொருத்தவரை எது வேலை செய்யும், எது வேலை செய்யவில்லை என்பதை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். எங்கள் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி இந்திய அணியின் டாப் ஆர்டரை வீழ்த்தினார்கள் என்று நினைக்கிறேன். டாசை வெல்வதும் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். எனவே இந்திய அணிக்கு எதிரான போட்டியை விளையாட ஆர்வமாக இருக்கிறோம்” என்று கூறி இருக்கிறார்.

The post இந்திய அணி செஞ்ச தவறை எல்லாம் கவனிச்சோம்.. அதனால இந்த முறை மிஸ் ஆகாது – நியூசி கேப்டன் சவால் appeared first on SwagsportsTamil.

Read Entire Article