ARTICLE AD BOX
என்ன ரோஸ் இதெல்லாம்... கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் காட்ட தயாரான டைட்டானிக் ஹீரோயின்!
ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய டைட்டானிக் திரைப்படம் மூலம் உலகளவில் பிரபலமானவர் கேட் வின்ஸ்லெட். நாயகன் டிகாப்ரியோ கேட் வின்ஸ்லெட்டை ஓவியமாக வரையும் காட்சி இன்றளவும் கொண்டாடப்படுகிறது. நடிகை கேட் வின்ஸ்லெட் தேர்வு செய்யும் படங்கள் பெயர் சொல்லும் படமாக இருந்துள்ளனர். 90ஸ் கிட்ஸ்களை கிரங்க வைத்த நடிகை கேட் வின்ஸ்லெட் தற்போது இயக்குநராக புது அவதாரம் எடுத்துள்ளார். இதற்கு ரசிகர்கள் பெரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
கப்பலில் மூழ்காத நாயகி: கடல் அலை கொண்டாட்டமும், அழகும் நிறைந்தாலும், அதில் ஆபத்தும் அதிகம் இருக்கின்றன. கடலில் மூழ்கும் கப்பலில், ஒரு அடர்த்தி நிறைந்த காதல் காட்சிகள் கண் முன்னே வந்து செல்கின்றன. டைட்டானிக் படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு காட்சிகளும் கற்பனைக்கு பின்னால் ஒழிந்துகொண்டிருக்கும் அழகின் ஓவியங்கள். ஜாக் ரோஸையும், நினைவுகூறும் ஒவ்வொரு காட்சிகளும் இரவின் நினைவு சின்னங்களாக அழகுப்படுத்தப்பட்டுள்ளன. உறைந்த பனியில் காதலனை பறிகொடுத்த காதலி ரோஸாக கேட் வின்ஸ்லெட் வாழ்ந்திருப்பார்.

தைரியமான நடிகை கேட் வின்ஸ்லெட்: டைட்டானிக் திரைப்படம் மிகப்பெரிய வெளிச்சத்தை கொடுத்தாலும் அதனை தொடர்ந்து அவர் நடித்த படங்கள் பெரிதளவில் பேசப்படவில்லை. தனது சினிமா கரியரை தொலைக்காட்சி தொடர்களிலேயே முடித்து கொண்டார் கேட் வின்ஸ்லெட். இவர் நடிப்பில் வெளியான தி ரீடர் திரைப்படம் அதிகம் பேர் பார்த்து ரசித்த படங்களில் ஒன்றாக உள்ளது. 3ஆம் உலகப்போர் காலகட்டத்தில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் தி ரீடர். இப்படத்தில் கேட் வின்ஸ்லெட் இளம்பெண்ணாக பள்ளி வருவ சிறுவனுடன் ஏற்படும் சல்லாபம் காதலா காமமா என்றே அறிந்து கொள்ள தவிக்கும் படைப்பாக இப்படம் வெளியானது. விமர்சன ரீதியா எதிர்ப்புகள் இருந்தாலும், நடிகையாக தைரியமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

ஹாலிவுட்டில் அடுத்த பரிணாமம்: கதைக்கேற்றார் போல் தனது நடிப்பில் வித்தியாசம் காட்டும் நடிகை கேட் வின்ஸ்லெட் தற்போது இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார். குட்பை ஜூன் என்ற தலைப்பில் உருவாகும் இந்த படம் இங்கிலாந்தில் ஒருவரின் இதயத்தை கவர்ந்த காதல் கதையாக இருக்கும் என கூறப்படுகிறது. காதல் என்றாலே எல்லோருக்கும் புது அனுபவம் கிடைக்கும். அதே போன்று சினிமா நடிகை, தொலைக்காட்சி தொடர், தயாரிப்பு என பன்முகத்திறமை கொண்ட கேட் வின்ஸ்லெட் இயக்குநராகவும் ஜொலிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த திரைப்படம் நேரடியாக நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

குவியும் வாழ்த்துகள்: நடிகையாக இருப்பதை காட்டிலும் மிகுந்த பொறுப்புணர்வுடன் எல்லோரையும் கவரும் ஒரு பணியை செய்வதாகவே உணர்கிறேன் என கேட் வின்ஸ்லெட் அண்மையில் தெரிவித்திருந்தார். எனக்கு பிடத்த பணியை நான் செய்ய தொடங்குகிறேன் என்றும் தெரிவித்திருந்தார். திரையுலகில் அவருடன் சேர்ந்து பணியாற்றிய சிலருக்கும் கேட் வின்ஸ்லெட் இயக்குநராக அறிமுகம் ஆவது இன்ப அதிர்ச்சியான செய்தியாக உள்ளது. இதனால், அவருக்கு பலரும் புத்துணர்ச்சி தரும் வகையில் ஆதரவும், வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். உவரது மாற்றத்தை கண்டு வியக்கிறோம் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். மேலும், குட்பை ஜூன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆவதுடன் அவரே தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
