ARTICLE AD BOX
அமெரிக்க நாட்டில் ஒரு தாய் தனது மகனை கொன்றுவிட்டு கொடுத்துள்ள வாக்குமூலத்தை கேட்டு போலீசார் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கின்றனர்.
அமெரிக்க நாட்டில் வசித்து வரும் 39 வயதான லீ என்ற பெண்மணி, தனது 17 வயது மகன் ஆஸ்ட்டின் என்பவருடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், சமீபத்தில் ஆஸ்டினுக்கு பிறந்தநாள் வந்துள்ளது. அன்று அவரை லீ கொலை செய்துள்ளார்.
இந்த சம்பவம் பற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட அவர்கள் விரைந்து வந்து லீயை கைது செய்தனர். அவரிடம் போலீசார் பெற்ற வாக்குமூலத்தில், " என் மகன் 18 வயதை தொட விரும்பவில்லை என்று என்னிடம் கூறினான். அதனால்தான் அவன் 18 வயது அடையும் முன் நான் அவனை கொன்று விட்டேன்.
இதையும் படிங்க: தன்னை பிடிக்கவந்த நபரிடமிருந்து தப்பிக்க பாம்பு செய்த காரியம்! இறுதியில் நடந்த சம்பவம்....
என் மூச்சை அதற்குள் நிறுத்திவிடு என்று அவன் என்னிடம் கோரிக்கை வைத்தான். அவன் கோரிக்கையை தான் நான் நிறைவேற்றினேன். என்மேல் எந்த தவறும் இல்லை." என்று தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.