ARTICLE AD BOX
உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள பள்ளியா மாவட்டம், திரிகல்பூர் கிராமத்தில் வசித்து வரும் 30 வயது பெண்மணி, கணவருடன் வாழ்ந்து வருகிறார். இதனிடையே, சம்பவத்தன்று ஹோலி திருவிழா நடைபெற்றது.
அப்போது, பெண்மணி தனது மாமனாரின் முகத்தில் வர்ணப்பொடியை பூசியுள்ளார். இந்த விஷயத்தை கவனித்த மாமியாரும், மருமகளை கண்டித்துள்ளார். மேலும், தொடர்ந்து அதனை கூறி சத்தமிட்டு இருக்கிறார்.
இதனால் மனமுடைந்துபோன பெண்மணி, தற்கொலை எண்ணத்துடன் விஷம் குடித்து இருக்கிறார். இந்த தகவலை அறிந்த உறவினர்கள், பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர்.
இதையும் படிங்க: பேராசிரியரின் பொறுக்கித்தனம்.. 20 மாணவிகள், 59 வீடியோக்கள்.. அதிர்ச்சியை தந்த பகீர் தகவல்.!
அங்கு பெண்மணி தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வந்தார். இதனிடையே, இன்று அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: 14 வயது சிறுமி 4 பேர் கும்பலால் கூட்டுப்பாலியல் வன்கொடுமை.. கரும்பு தோட்டத்தில் அதிர்ச்சி.!