எந்த வேலையில் இருந்தாலும் இனி அனைவருக்கும் பென்ஷன்.. மத்திய அரசின் மெகா பிளான்

3 hours ago
ARTICLE AD BOX

எந்த வேலையில் இருந்தாலும் இனி அனைவருக்கும் பென்ஷன்.. மத்திய அரசின் மெகா பிளான்

Delhi
oi-Mani Singh S
Subscribe to Oneindia Tamil

டெல்லி: இளைமை காலைம் முழுவதும் கடினமாக உழைத்துவிட்டு வயதான காலத்தில் ஓய்வு எடுக்கும் போது அவர்களுக்கான நிதி பாதுகாப்பாக ஓய்வூதியம் அளிக்கப்பட்டு வருகிறது. அரசு மற்றும் பொதுதுறை ஊழியர்களுக்கு மட்டுமே ஓய்வூதியம் உள்ளது.. இவர்களை தவிர, சில குறிப்பிட்ட ஓய்வூதியத் திட்டங்கள் மூலம் ஓய்வூதியம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இனி அனைத்து குடிமக்களுக்கும் ஒரு புதிய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது.

நாடு முழுவதும் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பென்ஷன் எனப்படும் ஓய்வூதியம் அளிக்கப்படுகிறது. தற்போது புதிய ஒருங்கிணைந்த புதிய ஓய்வூதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.

Pension New Pension Scheme

அமைப்புசாரா தொழில்கள் எனப்படும் கட்டுமான ஊழியர்கள், உள்ளிட்ட பல்வேறு தனியார் துறை, டெலிவரி ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு தற்போது இந்த பென்ஷன் திட்டம் எதுவும் கிடையாது. வயதான காலத்தில் இவர்களுக்கு ஓய்வூதியம் என எதுவும் கிடைக்காத நிலையே உள்ளது. எனவேதான் அனைத்து தரப்பினருக்கும் ஓய்வூதியம் கிடைக்கும் வகையில் யுனிவர்சல் பென்ஷன் ஸ்கீம் என்ற திட்டத்தை கொண்டு வருவது தொடர்பாக அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் இதற்கான ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அனைத்து சம்பளதாரர்கள், சுய தொழில் செய்பவர்களும் இந்த பென்ஷன் திட்டத்தின் கீழ் சேர முடியும் என்று சொல்லப்படுகிறது. எனினும், ஏற்கனவே உள்ள திட்டத்திற்கு புதிய இந்த பென்ஷன் திட்டத்திற்கு உள்ள மிக முக்கியமான வித்தியாசம் என்னவென்றால், பங்களிப்பு என்பது தன்னார்வ அடிப்படையில் இருக்கும். அரசு எந்த பங்களிப்பும் அளிக்காது. ஏற்கனவே உள்ள பென்ஷன் திட்டம் மற்றும் சேமிப்பு திட்டங்களை இணைத்து வரைமுறைப்படுத்தும் வகையில் இருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன

. இந்த புதிய திட்டம் புதிய பென்ஷன் திட்டம் என்று தற்போதைக்கு அழைக்கப்படுகிறது. ஏற்கனவே உள்ள தேசிய பென்ஷன் திட்டத்திற்கு மாற்றவாகோ அல்லது அதனுடன் இணைத்தோ இது கொண்டு வரப்படாது எனவும், முழுக்க முழுக்க விருப்பத்தின் அடிப்படையிலானது இந்த திட்டம் என்றும் அதிகாரிகள் வட்டாரத்தில் சொல்லபப்டுகிறது.

இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் என்னவென்றால் இதுவரை எந்த திட்டத்தின் கீழும் இணையாதவர்களை ஓய்வூதிய வரம்பிற்குள் கொண்டு வருவதே ஆகும். தற்போது அமைப்புசாரா தொழிலாளர்கள் வயதான காலத்தில் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் கொண்டு வரப்பட உள்ளதாம்

இந்த திட்டத்திற்கான முன்மொழிவு ஆவண பணிகள் முடிந்த பிறகு, சம்பந்தப்பட்ட தரப்பினருடன் இது குறித்து கலந்து ஆலோசிக்கப்படும் என்றும் தகவல்கள் கூறுகின்றன. அமைப்புசாரா தொழில்களில் உள்ள தொழிலாளர்களுக்காக ஏற்கனவே அரசின் சேமிப்பு திட்டங்கள் பல உள்ளன.

முதலீட்டாளர்களுக்கு 60 வயது ஆன பிறகு ரூ.1000-1,500 வரை திரும்ப கிடைக்கும் அடல் பென்ஷன் யோஜனா, சாலையோர வியாபாரிகள், தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு பலன் அளிக்க கூடிய பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மந்தனா ஆகிய பல திட்டங்கள் உள்ளன. அதேபோல விவசாயிகளுக்காக பிரதான் மந்திரி யோஜனா என்ற திட்டம் உள்ளது. இதன் கீழ் மாதம் ரூ. 3 ஆயிரம் கிடைக்கும். பயனாளிகள் 60 வயதை எட்டிய பிறகு இந்த தொகை மாதம் தோறும் வரவு வைக்கப்படுகிறது.

More From
Prev
Next
English summary
Pension is being provided to the youth as they retire after working hard throughout their youth and old age. Pension is available only to government and public sector employees. Apart from these, there are some specific pension schemes that provide pension. Now the government is planning to bring a new pension scheme for all citizens.
Read Entire Article