உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தலைவராக ஆர். பாலகிருஷ்ணன் நியமனம்!

4 hours ago
ARTICLE AD BOX

சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆர். பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

புகழ்பெற்ற தமிழ்மொழி அறிஞரும், ஆட்சிப்பணி வல்லுநருமான இவர், தமிழ் இலக்கியத்தில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களைப் பெற்று, தமிழில் குடிமைப்பணித் தேர்வுகளை எழுதி வென்ற முதல் தமிழ் மாணவர்.

ஆய்வாளர், படைப்பாளர் என்ற இரு தளங்களில் செயல்படும் இவர், 15 நூல்களின் ஆசிரியர். சிந்துவெளிப் பண்பாட்டு தொல்லியல் தரவுகளை சங்க இலக்கியங்கள் மற்றும் தமிழ்நாட்டு அகழாய்வுத் தரவுகளோடு ஒப்பிட்டு இவர் எழுதியுள்ள ஆங்கிலம் மற்றும் தமிழ் நூல்கள் உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளன.

1984-ல் ஐஏஎஸ் அதிகாரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர். பாலகிருஷ்ணன், இந்தியத் தேர்தல் ஆணையத்திலும் 34 ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றியதுடன், ஒடிஸா மாநிலத்தின் நிதித்துறைச் செயலர், கூடுதல் தலைமைச் செயலாளர், வளர்ச்சி ஆணையர் முதலான பொறுப்புகளை வகித்தார்.

தொடர்ந்து, 2018-ல் ஓய்வுபெற்ற இவர், 2024 வரையில் முன்னாள் ஒடிஸா முதல்வரின் தலைமை ஆலோசகராக பொறுப்பு வகித்தார். பேரிடர் மேலாண்மை, தேர்தல் மேலாண்மை போன்ற பல அரசுப் பணிகளில் இந்தியா முழுவதும் பணியாற்றியுள்ளார்.

இதையும் படிக்க: திமுக வேரோடு பிடுங்கப்படும்: அண்ணாமலை

Read Entire Article