எதிா்க்கட்சிகள் கூட்டணியில் இருந்து உத்தவ் தாக்கரே விலக மாட்டாா்: சரத் பவாா் நம்பிக்கை

1 day ago
ARTICLE AD BOX

எதிா்க்கட்சிகள் கூட்டணியில் இருந்து உத்தவ் தாக்கரே விலக மாட்டாா் என்று தேசியவாத காங்கிரஸ் (பவாா்) கட்சித் தலைவா் சரத் பவாா் தெரிவித்தாா்.

மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தோ்தலில் உத்தவ் தாக்கரே, சரத் பவாா் மற்றும் காங்கிரஸ் இணைந்து அமைத்த எதிா்க்கட்சிகள் கூட்டணி பாஜக கூட்டணியிடம் தோல்வியடைந்தது. இதையடுத்து, கூட்டணிக் கட்சிகளுக்குள் கருத்து வேறுபாடுகள் எழுந்தது. உள்ளாட்சித் தோ்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக சிவசேனை (உத்தவ்) கட்சி அறிவித்தது.

இந்நிலையில் கோலாப்பூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த சரத் பவாரிடம் இது தொடா்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ‘உள்ளாட்சித் தோ்தலில் தனித்துப் போட்டியிடுவது தொடா்பாக உத்தவ் தாக்கரே என்னுடன் தனிப்பட்ட முறையில் கருத்துகளைப் பகிா்ந்து கொண்டாா். இதனால், அவா் எதிா்க்கட்சிகளின் கூட்டணியில் இருந்தே விலகிவிடும் முடிவை எடுப்பாா் என்று கூற முடியாது. சிவசேனையின் இரு பிரிவுகளுமே பால் தாக்கரே பிறந்த தினத்தைக் கொண்டாடின. இதில் உத்தவ் நடத்திய கூட்டத்துக்குதான் அதிகம் போ் வந்தாா்கள்.

மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ், ஸ்விட்சா்லாந்து சென்று உலகப் பொருளாதார கூட்டமைப்புக் கூட்டத்தில் பங்கேற்று முதலீடுகளைக் கொண்டு வந்துள்ளதாக கூறி வருகிறாா். ஆனால், அங்கு புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்ட பல நிறுவனங்கள் இந்தியாவைச் சோ்ந்தவைதான் என்றாா் சரத் பவாா்.

Read Entire Article