ARTICLE AD BOX
27 வயதான செல்வி அவர் குடும்பத்தில் முதல் பட்டதாரி படிப்பு முடிந்த பிறகு ஒரு நல்ல நிறுவனத்தில் சேர்ந்து பணியாற்று தொடங்கியவர் திருமணத்திற்கு பிறகும் வேலைக்கு சென்று வருகிறார். மூன்று வயதில் அவருக்கு ஒரு குழந்தையும் உண்டு அன்பான கணவரும் ஓரளவுக்கு புரிதல் உள்ள குடும்பத்தினரும் அமைந்துள்ளதாலும் ஏதோ ஒரு மனக்கவலை அவரை வாட்டியது…
எந்த வேலையும் ஈடுபாடுடன் செய்ய முடியாமல் உடலில் சக்தி இல்லாத போலவும் போதுமான தூக்கம் இல்லாதது போலவும் அவர் உணர்ந்தார். தன்னுடைய அன்றாட பணிகளை செய்வதே பெரும் போராட்டமாக பெரும் முயற்சி தேவைப்படும் விஷயமாகவும் அவருக்குத் தெரிந்தது. தனக்கு உதவி செய்ய யாரும் இல்லையே தான் ஏன் வாழ வேண்டும் என்கிற நம்பிக்கையற்ற நிலையில் குழம்பிப் போயிருந்தார் அவர். குழந்தைக்காக எப்படியாவது இதிலிருந்து மீண்டு வர வேண்டும் என நினைத்தார். தனக்குள் வைத்து புலம்பிக் கொண்டு நாள்தோறும் இருந்தால் மன தைரியத்தை வரவழைத்துக் கொண்டு தன்னுடைய பிரச்சனைகளை இணையாரிடமும் குடும்பத்தாரிடமும் பகிர்ந்து கொண்டார்.. வேலைக்கு செல்வதை நிறுத்தலாம் வீட்டிலேயே ரிலாக்ஸ் செய்யலாம் என பரிந்துரைகள் வழங்கினர் செல்வி மேலும் பலவீனமாக உணர்ந்தார். தனக்கு பிடித்த ஒரு பாடத்தில் கல்வி கற்று வேலைக்கு செல்வதை குறிக்கோளாக வைத்து அதை எட்டிப் பிடிப்பதை செல்வி அடைந்த வேலையை விட வேண்டிய சூழலில் இருக்கிறோமே என வருந்தினார் இன்னொரு பக்கம் இந்த மனக்கவழியில் இருந்தும் மனப்போராட்டத்தில் இருந்தும் எப்படியாவது மீண்டு வந்து விடலாம் என்கிற நம்பிக்கையும் அவருக்கு கொஞ்சம் இருக்கிறது. எதிர்மறை எண்ணங்களை கூடுதலாக இருந்ததால் தோல்வியிடம் தன்னுடைய பிரச்சனைகளையும் மனக் கவலைகளையும் தான் எதிர்கொள்ளும் வாழ்க்கை சிக்கல்களையும் பகிர்ந்து கண்ணீர் விட்டு அழுதார் செல்வி. தன் தோழி வழங்கிய ஆலோசனையை இயற்ற மனநல மருத்துவரை சந்திக்க முடிவு எடுத்து என்னிடம் வந்தால் செல்வியின் மனநிலை குறித்து பரிசோதித்து அவருக்கு தைராய்டு உள்ளிட்ட உடல் ரீதியான பிரச்சினைகள் ஏதேனும் இருக்கின்றனவா என்பதை ஆய்வு செய்து முழுமையான உளவியல் பரிசோதனை செய்தேன். அப்போது அவருக்கு தீவிரமான மனக்கவலை இருப்பதை கண்டறிய முடிந்தது அதற்கான மனநல மருத்துவர் சிகிச்சையும் ஆலோசனையும் வழங்கினேன்…
செல்வியின் இணையரிடமும் அவரது பிரச்சினைகளைப் பற்றி புரிய வைத்து மட்டுமல்லாமல் இன்றைய காலகட்டத்தில் பாலின பொறுப்புகள் எப்படி மாறி வருகின்றன வேலைக்கு செல்லும் பெண்களின் வாழ்க்கையை எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் சுமக்கும் கூடுதல் பொறுப்புகளையும் எவ்வாறு பகிர்ந்து கொண்டு ஆதரவாக இருக்க வேண்டும் என்பதை பற்றியும் விளக்கினேன். நான் சொன்ன விஷயங்களை புரிந்து கொண்ட செல்வியின் கணவர் அவரைத் தொடர்ந்து சிகிச்சைக்கும் அழைத்து வந்தார். சில மாதங்களில் தனது மனக் கவலையில் இருந்து முழுமையாக மீண்டு நலம் பெற்றார் செல்வி.வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பணியிடத்திலோ வீட்டிலோ பெரும்பாலும் ஓய்வு இருக்காது தன்னை கவனித்துக் கொள்வதற்கான நேரமும் அவர்களுக்கு கிடைப்பதில்லை அமைப்புசாரா பணிகளில் ஈடுபடும் பெண்களுக்கு குழந்தைகளை பராமரிப்பதற்கான இடமும் சீரான பணி நேரமும் கிடையாது. வீட்டில் இருந்தபடி வேலை செய்யும் தொழில் அலுவலகத்திற்கும் ஆன எல்லை மழுங்கடிக்கப்படுவதால் ஒரே நேரத்தில் வீட்டு பொறுப்புகளையும் அலுவலக வேலையும் கையாள வேண்டி சுழலுக்கு தள்ளப்படுகிறார்கள். இணையர் குடும்பத்தினரின் உதவி இருக்கும் பட்சத்தில் பெரும்பாலான பெண்களால் சமாளிக்க முடிகிறது ஆனால் ஆதரவற்ற பெண்கள் கடும் உளவியல் நெருக்கடியை எதிர்கொள்ள செய்கின்றனர். அதோடு ஆணாதிக்க சமுதாயம் வேலைக்கு செல்லும் பெண்களை அணுகும் விதமும் அவர்களுக்கு கூடுதல் நெருக்கடிகள் உருவாக்க காரணமாகிறது வேலைக்கு செல்லும் பெண்களின் மனநிலை பிரச்சனைகளை மாதவிடாய் தொடர்பானதால் மட்டும் சுருங்கி விடக்கூடாது. பெண்களின் பிரச்சனைகளை குறுகிய கண்ணோட்டத்தோடு அணுகுவது சரியான தீர்வை வழங்காது. சமூக ரீதியான மாற்றங்கள் ஏற்படும் போது தான் வேலைக்கு செல்லும் பெண்களின் மனநல நெருக்கடிகள் வெகுவாக குறையும் வேலைக்கு ஏற்ப பாலியல் வேதமற்ற சம ஊதியம் பாதுகாப்பான அலுவலக சூழல் ஓய்வு நேரம் பணியிடத்தில் குழந்தைகள் பராமரிப்பு மையங்கள் பாலூட்டு மறைகள் வருமானத்துடன் கூடிய பேருக்கான விடுப்பை போன்ற கொள்கை சார்ந்த முடிவுகளை செயல்படுத்துவது தான் வேலைக்கு செல்லும் பெண்களின் மன நலத்தை பாதுகாக்க உதவும் எனக் கூறினார் மருத்துவர்..
இறுதியில் அவர் கூறியது : குற்ற உணர்வுகளுக்கு சிறிதும் இடம் கொடுக்காமல் தங்களுக்கான நேரத்தை ஓய்வு பெண்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். குடும்பத்தினரின் உடல்நலத்தில் எவ்வளவு அக்கறை உள்ளது அதேபோல தன்னுடைய உடல் நலத்தின் மீதும் மனநலத்தின் மீதும் கண்டிப்பாக அக்கறை கொள்ள வேண்டும் ஏதேனும் பிரச்சனை இருந்தால் வேறொரு நபரை சார்ந்திராமல் தீர்வு தேடுவது நல்லது…!!