ARTICLE AD BOX

கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகா பகுதியில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வீரகவுடனஉண்டி கிராமத்தைச் சேர்ந்த சித்தராஜுவின் மனைவி வினோதா (25), கடந்த இரண்டு ஆண்டுகளாக வயிற்று வலி காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார். பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் அவர் முழுமையாக குணமடையவில்லை.
இந்த நிலையில் தொடர்ந்து வயிற்று வலியால் அவதிப்பட்ட வினோதா திடீரென வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த நஞ்சன்கூடு புறநகர் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வினோதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.