ARTICLE AD BOX

பொதுமக்களுடைய தேவையை பொருத்து வங்கிகள் வீட்டுக் கடன், கல்விக் கடன், நகை கடன் என பல கடன்களை வழங்கி வருகிறது. இதன் மூலமாக பலருடைய கனவுகளும், ஆசைகளும் நிறைவேறி வருகிறது என்று சொல்லலாம். இந்நிலையில் செப்டம்பர் மாதம் முதல் பல வங்கிகளுடைய வட்டியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
எஸ்பிஐ வங்கி: எம்சிஎல்ஆர் அடிப்படையில் 8.20% முதல் 9.1% வரை உயர்த்தப்பட்டுள்ளது.
பேங்க் ஆப் பரோடா: மூன்று மாத காலத்தை தவிர எந்த விட கடன் வீதத்தையும் மாற்றி அமைக்கவில்லை. ஒரே இரவு விகிதத்தை வங்கி 9.10% ஆகவும் ஒரு மாதத்திற்கு 9.15% ஆகவும் மாற்றியுள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கி: சில தவணைகளில் கடன் விகிதங்களை 5 பிபிஎஸ் உயர்த்தியுள்ளது. ஒரே இரவு விகிதம் இப்போது 8.30% ஆகவும், ஒரு மாதத்திற்கான MCLR அடிப்படையிலான கடன் விகிதம் 8.40% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ஐடிபிஐ வங்கி: ஒரே இரவு தவணைக்கான சமீபத்திய MCLR 8.40% ஆகும். ஒரு மாத காலத்திற்கு, MCLR 8.55% ஆகும். மூன்று மாத MCLR விகிதம் 8.85% ஆகவும், ஆறு மாத MCLR 9.10% ஆகவும் உயர்த்தி உள்ளது.
கனரா வங்கி: அனைத்து தவணைகளையும் 5 bps அதிகரித்துள்ளது. இரவு நேர விகிதம் இப்போது 8.25% ஆக உள்ளது. ஒரு மாத விகிதம் 8.35% ஆகவும், 3 மாத விகிதம் 8.45% ஆகவும் உயர்த்தியுள்ளது.