ARTICLE AD BOX
தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெறவுள்ள நிலையில், அக்கட்சி நிர்வாகிகள் ராமச்சந்திரா கலையரங்கத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
திருவான்மியூர் ராமச்சந்திரா கலையரங்கத்தில் வரும் மார்ச் 28-ஆம் தேதி காலை 9 மணிக்கு தவெக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் அறிவித்து இருந்தார்
இதில் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் அழைப்புக் கடிதம் மற்றும் கட்சியின் அடையாள அட்டையுடன் பங்கேற்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிக்க: அப்பா இறந்தபோது... ரசிகர்களால் வேதனையடைந்த பிருத்விராஜ்!
இந்நிலையில், பொதுக்குழு கூட்டம் நடைபெறும் திருவான்மியூர் ராமச்சந்திரா கலையரங்கத்தில் தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த், தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச் செயலர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த ஆய்வில் ஜான் ஆரோக்கியசாமி உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் பங்கேற்றுள்ளனர்.