’எங்க தலைவரை பார்த்து என்ன வார்த்தை சொல்லிட்டீங்க’..!! அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த என்.ஆனந்த்..!!

10 hours ago
ARTICLE AD BOX

அண்ணாமலைக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் பேட்டியளித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் வரும்ம் 28ஆம் தேதி கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நடைபெறவுள்ளது. சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்சன் மையத்தில் இந்த பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்நிலையில் பொதுக்குழு நடைபெறும் மண்டபத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா, ஜான் ஆரோக்கியசாமி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பொதுச்செயலாளர் என்.ஆனந்த், “வரும் 28ஆம் தேதி தவெக தலைவர் விஜய் தலைமையில் முதல் பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் இதில் கலந்து கொள்ளவுள்ளனர். மொத்தம் எத்தனை பேர் கலந்து கொள்வார்கள் என பின்னர் தெரிவிக்கப்படும்.

இந்த பொதுக்குழுவில் சிறப்பு அழைப்பாளர்கள் யாரும் கலந்து கொள்ள மாட்டார்கள். கட்சியின் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்பார்கள்” என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், “வீட்டில் அமர்ந்து கொண்டு அறிக்கை விடக்கூடாது என அண்ணாமலை விமர்சிக்கிறார். யார் எதை வேண்டுமானாலும் சொல்லட்டும். தலைவர் விஜய் வழியில் அவரது அறிவுறுத்தல் படி மக்கள் சேவை செய்வது தான் எங்களின் நோக்கமே. அண்ணாமலை கருத்துக்கு எல்லாம் நான் பதில் சொல்லிக்கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை” என்றார்.

Read More : BREAKING | வனப்பகுதிக்குள் டமால் டுமீல்..!! என்கவுண்டரில் 22 நக்சல்கள் சுட்டுக்கொலை..!! போலீஸ் அதிகாரியும் உயிரிழந்த சோகம்..!!

The post ’எங்க தலைவரை பார்த்து என்ன வார்த்தை சொல்லிட்டீங்க’..!! அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த என்.ஆனந்த்..!! appeared first on 1NEWSNATION - Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.

Read Entire Article