ARTICLE AD BOX
உணவுப் பொருள்கள் மற்றும் மளிகை சாமான்களை எக்ஸ்பைரி தேதி பார்த்து தான் வாங்க வேண்டும். ஆனால் ஒரு உணவு எக்ஸ்பைரி ஆன உடனே குப்பை தொட்டியில் தூக்கி வீச வேண்டியது இல்லை. காலாவதி தேதிக்குப் பிறகு அவற்றை உண்டால், நல்ல சுவையுடன் இருக்காது. இது அந்த உணவில் தரத்தை குறிக்கிறது. அதேசமயம் ஒரு உணவுப் பொருள் அழுகி, சுவை, மணம் எதுவும் இல்லாமல் இருக்கும்போது அதை உண்ணக்கூடாது. அது ஃபுட் பாய்சனுக்கு வழி வகுக்கும். ஆனால சில உணவுப்பொருட்களை அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தேதியை தாண்டி நான்காவது நாட்கள் அல்லது சில மாதம் வரை வைத்து உண்ணலாம். அவ என்ன என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
1. பிஸ்கட்டுகள்; பிஸ்கட் பாக்கெட்களின் வெளியே குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்பயரி தேதியை தாண்டியும் அவற்றை உண்ணலாம். ஏனென்றால் அது பதப்படுத்தப்பட்ட உணவு. எனவே திறக்கப்படாத பிஸ்கட் பாக்கெட்டை எக்ஸ்பயரி தேடி தாண்டியும் சிறிது நாட்கள் வைத்து உண்ணலாம்.
2. தேன்; குறைந்த ஈரப்பதம் காரணமாக தேன் விரைவில் அழுகாது, கெட்டுப்போகாது.
3. அரிசி; அரிசியை உலர்வாக ஒரு பாத்திரத்தில் போட்டு மூடி வைத்தால் அது நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.
4. ஆப்பிள் சிடார் வினிகர்; இது முறையாக சீல் வைக்கப்பட்டிருந்தாள் அது அமிலத்தன்மை காரணமாக விரைவில் கெட்டுப்போகாது.
5. சோயா சாஸ்; வினிகரைப்போலவே சோயா சாஸும் சரியாக சேமிக்கப்பட்டிருந்தால், அது நீண்ட நாளைக்கு உழைக்கும்.
6. பாஸ்தா உலர்ந்த பாஸ்தாவை பாக்கெட்டில் போட்டு சேமித்து வைத்தால் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.
7. பிராசஸ் செய்யப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகள்; ஊறுகாய் போன்ற புளிக்க வைக்கப்பட்ட பழங்களும் காய்களும் சில ஆண்டுகள் வரை பாதுகாப்பாக இருக்கும்.
8. உலர் பழங்கள்; இவற்றில் சர்க்கரை மற்றும் கலோரிகள் அதிகமாக இருந்தாலும் உலர் பழங்கள் பூஞ்சை வளர்ச்சியை தடுக்கும். இவை சரியாக பாதுகாக்கப்பட்டால், நீண்ட காலத்திற்கு உண்ணக்கூடிய வகையில் இருக்கும்.
9. உலர்ந்த பீன்ஸ்; இயற்கையாகவே குறைந்த ஈரப்பதம் கொண்ட இந்தப் பொருள் சரியான சூழ்நிலையில் சில ஆண்டுகள்வரை சேமித்து வைத்து பயன்படுத்த ஏற்றது.
10. உலர்ந்த தானியங்கள் போன்ற உலர்ந்த தானியங்கள் வறண்ட சூழலில் சேமிக்கப்பட்டிருக்கும்போது அது விரைவில் கெட்டுப்போகாது நீண்ட நாளுக்கு வைத்து பயன்படுத்தலாம்.
11. கடினமான சீஸ் வகைகள்; இவற்றை முறையாக பாதுகாத்து வைத்தால் காலாவதி தேதியை தாண்டி சில மாதங்கள் வரை உபயோகிக்கலாம்.
12. நெய்; நெய்யின் நிறைவுற்ற கொழுப்பு உள்ளடக்கம் காரணமாக இது நன்றாக நீடித்து இருக்கக் கூடியது. ஆண்டுகள் ஆனாலும் கெடாது. தண்ணீர் படாமல் பார்த்துக்கொள்வது அவசியம்.
13. எண்ணெய் வகைகள்; கடலை எண்ணெய் காலாவதி தேதி தாண்டியும் இதை சில நாட்களுக்கு பயன்படுத்தலாம். ஆலிவ் எண்ணெய்; வெளிச்சம் அதிகம் இல்லாத இருட்டான இடத்தில் இதை சேமித்து வைத்து பயன்படுத்தினால் நீண்ட நாள் பயன்படுத்தலாம். தேங்காய் எண்ணெய் அறை வெப்ப நிலையில் வைத்து பயன்படுத்தப்படும்போது நீண்ட நாட்களுக்கு உபயோகிக்கலாம்.
14. ரொட்டி; மேற்பரப்பில் பூஞ்சை வளரவில்லை என்றால் குறிப்பிட்ட தேதிக்கு பிறகு ஒரு வாரம்வரை வைத்து உண்ணலாம். பூஞ்சை வளர்ந்தால் அதை குப்பையில் எறிய வேண்டியதுதான்.
15. டார்க் சாக்லேட் ;குளிர்சாதன பெட்டியில் வைத்து பயன்படுத்தும்போது இது எக்ஸ்பைரி தேதிக்குப் பிறகும் சில நாட்கள் வைத்து பயன்படுத்தலாம்.
16. காலிஃப்ளவர் கேரட் மற்றும் சிவப்பு குடை மிளகாய்; இந்த காய்கறிகளின் அடர்த்தியான அமைப்பால், அதன் எக்ஸ்பைரி தேதி தாண்டியும் சில நாட்கள் வரை உண்ணலாம்.