எஃப்பிஐ இயக்குநரானார் இந்திய வம்சாவளி காஷ் படேல்: செனட் ஒப்புதல்!

3 days ago
ARTICLE AD BOX

அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ-யின் இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த காஷ் படேலை நியமனம் செய்ய செனட் ஒப்புதல் அளித்துள்ளது.

அமெரிக்க செனட் அவை கூட்டத்தில் காஷ் படேலின் நியமனத்துக்கு ஜனநாயகக் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

செனட் அவையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் காஷ் படேலின் நியமனத்துக்கு ஆதரவாக 51 வாக்குகளும் எதிராக 49 வாக்குகள் பதிவானது. இதனைத் தொடர்ந்து, எஃப்பிஐ-யின் இயக்குநராக காஷ் படேலின் நியமனத்துக்கு ஒப்புதல் பெறப்பட்டது.

எஃப்பிஐ இயக்குநராக நியமிக்கப்பட்டது குறித்து காஷ் வெளியிட்ட பதிவில், “என்மீது நம்பிக்கை வைத்த டிரம்புக்கு நன்றி. எஃப்பிஐ மீதான நம்பிக்கையை மீண்டும் கட்டெழுப்புவேன். அமெரிக்காவுக்கு தீங்கு விளைவிக்க நினைப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கின்றேன். அமெரிக்காவுக்கு எதிராக இந்த கிரகத்தின் ஒவ்வொரு மூளையில் இருப்பவர்களையும் வேட்டையாடுவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க : இந்தியாவில் ‘டெஸ்லா’ ஆலை: அமெரிக்க அதிபா் டிரம்ப் அதிருப்தி

கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப், அமெரிக்காவின் முதன்மை சட்டம்- ஒழுங்கு அமைப்பான எஃப்பிஐ-யின் இயக்குநராக இந்தியா வம்சாவளியைச் சோ்ந்த காஷ் படேலை நியமித்தார்.

கடந்த 2016-இல் நடைபெற்ற அமெரிக்கா அதிபா் தோ்தலில் ரஷியாவின் தலையீட்டை வெளிக்கொண்டு வருவதில் காஷ் படேல் முக்கியப் பங்காற்றினாா். இவா், டிரம்ப்பின் தீவிர ஆதரவாளா் ஆவாா்.

Read Entire Article