ஊருக்காக ஆடும் கலைஞன்..ரோஹித்திற்கு மட்டும் இப்படியா? கடைசியாக தவறவிட்ட சதம் & அரைசதம்!

3 days ago
ARTICLE AD BOX
rohit sharma icc

துபாய் : இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சமீபகாலமாக பார்மில் இல்லை என்கிற விமர்சனங்கள் எழுந்து கொண்டு இருக்கிறது. ஆனால், கடைசியாக அவர் ஐசிசி நடத்திய 10 ஒரு நாள் போட்டியில் சில சதங்களையும், பல அரை சதங்களையும் தவறவிட்டுள்ளது பற்றி தெரியுமா? அவர் கடைசியாக விளையாடிய 10 (ஐசிசி) போட்டிகளில் 2 சத்தங்களை தவறவிட்டுள்ளார்.

அதைப்போல, 6 அரை சதங்களை தவறவிட்டு 40, 48 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறியிருக்கிறார். அதன்படி, ஐசிசி ஒருநாள் போட்டிகளில் ரோஹித் சர்மாவின் கடைசி 10 இன்னிங்ஸ்களில் அவர் அடித்த ரன்களின் விவரம் ( 86, 48, 46, 87, 4, 40, 61, 47, 47, 41) இப்படி பலமுறை அவுட் ஆகி இருப்பதால் இந்த போட்டிகளிலெல்லாம் கொஞ்சம் பொறுமையாக இருந்திருந்தால் நிச்சயமாக சதம் & அரைசதம் விளாசி சாதனைகளை படைத்திருக்கலாம்.

ஆனால், ரோஹித் சர்மா அதனை பார்க்கலாம் சிக்ஸர் அடிக்கும் பந்துகள் வருகிறது என்றால் அதனை சிக்ஸர் அடிக்க முயல்வார். தைரிமாக விளையாடி அணிக்கு ரன்காள் சேகரிக்க விரும்புகிறார். இதன் காரணமாவே பலமுறை அவர் ஆட்டமிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஐசிசி ஒருநாள் போட்டிகளில் ரோஹித் சர்மாவின் கடைசி 10 இன்னிங்ஸ்களில் அவர் அடித்த ரன்களை பார்த்த ரசிகர்கள் தன்னலமற்ற வீரர் ரோஹித் சர்மா என பாராட்டி வருகிறார்கள்.

மேலும், நேற்று நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா விளையாடிய நிலையில், அந்த போட்டியில் ரோஹித் சர்மா 41 ரன்கள் எடுத்து அரை சதம் விளாசவில்லை என்றாலும் பெரிய சாதனை ஒன்றை படைத்திருக்கிறார். அது என்ன சாதனை என்றால், ஒருநாள் கிரிக்கெட்டில் வேகமாக 11000 ரன்களை எட்டிய இரண்டாவது வீரர் என்ற சாதனை தான்.

ரோஹித் தன்னுடைய 261வது இன்னிங்ஸில் இந்த மைல்கல்லை எட்டினார், அதே நேரத்தில் விராட் கோலி 222 இன்னிங்ஸ்களில் இந்த மைல்கல்லை எட்டி முதலிடத்தில் இருக்கிறார். இதற்கு முன்னதாக இரண்டாவது இடத்தில் சச்சின் 2002ல் இங்கிலாந்துக்கு எதிராக தனது 284வது போட்டியில் பதிவு செய்து இந்த சாதனையை படைத்திருந்தார். தற்போது அந்த சாதனையை முறியடித்து ரோஹித் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.

Read Entire Article