ஊட்டி, கொடைக்கானல் போரடிச்சுடுச்சா?...அப்டின்னா மகாராஷ்டிராவின் இந்த 5 இடங்களுக்கு வாங்க

3 hours ago
ARTICLE AD BOX

கோடை காலத்தில் குளுகுளுவென ஜாலியாக இருக்க ஊட்டி, கொடைக்கானல் போய் போரடிச்சிடுச்சா? அப்படின்னா இந்த வருடம் மகாராஷ்டிரா போய் விட்டு வாருங்கள். உங்கள் கோடை கால சுற்றுலா பட்டியலில் கட்டாயம் இடம்பெற வேண்டிய மகாராஷ்டிராவில் உள்ள ஐந்து மலைவாச ஸ்தலங்கள் என்னவென்று பார்க்கலாம்.

List of 5 must visit hill stations in Maharastra

ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் மக்கள் சுட்டெரிக்கும் கோடையில் இருந்து தப்பிக்க மலை வாசஸ்தலங்களை நோக்கி தங்கள் விடுமுறை பயணத்தை மேற்கொள்கிறார்கள். மகாராஷ்டிராவில் உள்ள ஐந்து அழகான மலை வாசஸ்தலங்கள் உங்கள் கோடைகால சுற்றுலா செல்வதற்கு ஏற்ற இடங்கள் ஆகும்.

மகாராஷ்டிரா நிலப்பரப்புகள், கடற்கறைகள், பரபரப்பான நகரங்கள் மற்றும் அமைதியான மலைவாசஸ்தலங்கள் ஆகியவற்றின் அற்புதமான ஒரு கலவை. இது இந்தியாவில் மிகவும் மாறுபட்ட மாநிலங்களில் ஒன்றாக உள்ளது. இங்குள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகள், கோடை காலத்தில் மிகவும் பசுமையானதாகவும், மூடுபனி சிகரங்கள் மற்றும் குளிர்ந்த கால நிலைக்கு ஏற்றதாகவும் உள்ளது. மகாராஷ்டிராவில் உள்ள இந்த சிறிய மலைவாசஸ்தலங்கள், தெளிவான மலைக்காற்று மற்றும் ரம்மியமான இயற்கை காட்சிகள் ஓய்வு நேரங்களை நன்றாக அனுபவிக்க ஏற்ற இடமாகும்.

மகாராஷ்டிராவில் கட்டாயம் பார்க்க வேண்டிய 5 மலைவாச ஸ்தலங்கள் :

மஹாபலேஷ்வர்

மஹாபலேஷ்வர், வானிலை எப்பொழுதும் ஒரே மாதிரியாக உள்ள ஒரு இடம். மூடுபனி நிறைந்த காலை, குளிர்ந்த காற்று மற்றும் பசுமையான நிலப்பரப்புகளுடன் இது பயணம் செல்வோருக்கு மிகவும் பிடித்த இடமாகும். இங்கு கோடை காலத்தில் நகரம் முழுவதும் ஸ்ட்ராபெரிகள் அதிகம் விளையும். நீங்கள் பண்ணையில் இருந்து நேரடியாகவே வாங்கி சாப்பிடலாம். இங்குள்ள வெண்ணா ஏரியில் படகு சவாரி மிகவும் அற்புதமானது. மேலும் இங்கு உள்ள ஆர்தர்ஸ் சீட்டில் இருக்கும் பரந்த காட்சிகளும், பிரமிக்க வைக்கும் லிங்மாலா நீர்வீழ்ச்சியும் உள்ளது.அது மலையேற்றம் செய்வதற்கு உகந்த இடமாகும். சுவையான உணவை ருசிக்க விரும்புபவர்களுக்கு உள்ளூரில் கிடைக்கும் மகாராஷ்டிரா தாலி மிகவும் பிரபலமானது.

லோனா வாலா மற்றும் கண்டாலா

லோனோவாலா மற்றும் கண்டாலா ஆகியவை மும்பையில் உள்ளோருக்கும் புனேயில் வசிப்பவர்களுக்கும் விரைவான மன அழுத்தம் இல்லாத ஓய்வுக்கான ஒரு உன்னதமான மலைவாசஸ்தலங்கள் ஆகும். மூடுபனி நிறைந்த மலைகள், பிரமிக்க வைக்கும் சூரிய அஸ்தமனம், அற்புதமான பள்ளத்தாக்கு காட்சிகள் போன்றவை இங்கே கண்டு மகிழ ஏற்ற இடங்கள். இங்குள்ள பூஷி அணை ராஜ்மாச்சி கோட்டை போன்றவற்றில் நடைபயணம் செய்து மகிழலாம்.

மாதேரான்

இந்தியாவின் ஒரே ஆட்டோமொபைல் சாதனங்கள் இல்லாத மலைவாசஸ்தலம் மாதேராணாகும். இந்த நகரத்தில் குதிரை சவாரிகள் கையால் இழுக்கப்படும் ரிக்ஷாக்கள் மற்றும் மலைகள் வழியாக செல்லும் ஒரு அற்புதமான டாய் டிரெயின் ஆகியவற்றில் சென்று ஒரு புத்துணர்ச்சியூட்டும் காற்றை அனுபவிக்கலாம். இங்கு பார்வையிட சுமார் 38 இடங்கள் உள்ளன. அதில் மிகவும் பிரபலமான இடங்கள் மனோரமா பாயிண்ட் மற்றும் லூசியா பாய்ண்ட் ஆகியவை கண்களை கவரும் இடங்கள். கார்கள், வண்டிகள் அனுமதிக்கப்படாததால் சிவப்பு சேற்றுப் பாதையில் நடப்பது ஒரு நல்ல அனுபவமாகும். இங்குள்ள பாரம்பரிய பங்களாக்கள் மற்றும் பழைய உலக கஃபேக்கள் விண்டேஜ் அழகியலில் ஆர்வமாக உள்ளவர்களுக்கு சிறந்த இடங்கள் ஆகும்.

பஞ்ச் கனி

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பஞ்ச் கனி ஐந்து மலைகளைக் கொண்டுள்ளது. இது இயற்கை ஆர்வலர்களுக்கு ஒரு கனவு இடமாக அமைகிறது. இங்குள்ள டேபிள் லேண்ட் ஆசியாவின் இரண்டாவது பெரிய மலை ஆகும். இந்த மலையின் அபரிமிதமான பரந்த காட்சிகள் காண்போர் ரசிக்கும்படியாக உள்ளது. இங்கு குதிரை சவாரி போன்றவை செய்து மகிழலாம். இங்குள்ள வரலாற்று சிறப்புமிக்க 19 ஆம் நூற்றாண்டின் பார்சி வீடுகள் அழகான விதத்தில் பார்வையாளர்கள் ரசிக்கும் படியாக உள்ளது.

சிக்கல்தாரா

மகாராஷ்டிராவில் உள்ள சிக்கல்தாரா காபி வளரும் ஒரு பகுதியாகும். வனவிலங்கு பிரியர்களுக்கு இது ஒரு சிறந்த இடம். அருகில் உள்ள மில்காட் புலிகள் சரணாலயம் குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரும் வனவிலங்குகளை பார்வையிட ஒரு ஏற்ற இடம் ஆகும். இங்கு புலி, சிறுத்தை, கரடி போன்ற விலங்குகள் உள்ளன. பயணிகள் மலையேற்றம் செய்வதற்கு இது ஒரு சிறந்த இடமாகும். இங்குள்ள வேறு சில முக்கியமான இடங்கள் கவில்கர்கோட்டை பீம்குண்ட் நீர்வீழ்ச்சி, மொசாரி பாயிண்ட் போன்ற இடங்களாகும்.

Read more about: maharashtra
Read Entire Article