ARTICLE AD BOX
Published : 25 Feb 2025 05:39 AM
Last Updated : 25 Feb 2025 05:39 AM
உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று கோவை வருகை

கட்சி அலுவலகம் திறப்பு, ஈஷாவில் நடக்கும் மகா சிவராத்திரி விழா ஆகியவற்றில் கலந்து கொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று (பிப்.25) கோவை வருகிறார். இதையொட்டி கோவையில் 7 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை அவிநாசி சாலை, பீளமேடு பகுதியில், கோவை மாநகர் மாவட்ட பாஜக அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டிடத்தின் திறப்பு விழா நாளை (பிப்.26) காலை நடக்கிறது. இந்நிகழ்வில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு புதிய அலுவலக கட்டிடத்தை திறந்து வைக்கிறார். மேலும், கோவையில் இருந்து ராமநாதபுரம், திருநெல்வேலி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள புதிய கட்சி அலுவலக கட்டிடங்களையும் மத்திய அமைச்சர் அமித்ஷா கானொலிக்காட்சி மூலம் திறந்து வைக்கிறார். மேலும், அன்றைய தினம் மாலை கோவை ஈஷா யோகா மைய வளாகத்தில், மகா சிவராத்திரி விழா நடக்கிறது. இதில் சிறப்பு விருந்தினராக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொள்கிறார்.
இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மத்திய அமைச்சர் அமித்ஷா, இன்று மாலை புதுடெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் கோவை பீளமேட்டில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு வருகிறார். அங்கு இருந்து கார் மூலம் நவஇந்தியா பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்குச் சென்று இரவு தங்குகிறார். மறுநாள் பீளமேட்டில் நடக்கும் கட்சி அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்டு, புதிய அலுவலகத்தை திறந்து வைக்கிறார். இந்நிகழ்வில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை செளந்தரராஜன், பாஜக மாநில, மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். கட்சி அலுவலகம் திறப்புக்கு பிறகு, அங்கேயே முக்கிய கட்சி நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறார். பின்னர், அன்று மாலை ஈஷாவில் நடக்கும் மகா சிவராத்திரி விழாவில் மத்திய அமைச்சர் அமித்ஷா கலந்து கொள்கிறார். தொடர்ந்து அன்றிரவு ஈஷா வளாகத்தில் தங்கும் மத்திய அமைச்சர் அமித்ஷா, மறுநாள் காலை ஹெலிகாப்டர் மூலமாக ஈஷாவில் இருந்து புறப்பட்டு, கோவை விமான நிலையத்துக்கு வந்தடைகிறார். பின்னர், கோவையிலிருந்து விமானம் மூலம் புதுடெல்லி திரும்புகிறார்.
மத்திய அமைச்சர் அமித்ஷா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக் கொடி போராட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளதால் கோவையில் போலீஸாரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் மேற்பார்வையில், மேற்கு மண்டல ஐஜி செந்தில்குமார், கோவை மாநகர காவல் ஆணையர் ஏ.சரவண சுந்தர் ஆகியோர் தலைமையில் காவல் கண்காணிப்பாளர்கள், துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் என 7 ஆயிரம் பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அமித்ஷா தங்குமிடம், பீளமேடு கட்சி அலுவலகம் உள்ள பகுதி, ஈஷா வளாகம், அமித்ஷா செல்லும் பாதைகள் ஆகிய இடங்கள் போலீஸாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும், கோவையில் மத்திய அமைச்சர் அமித்ஷா தங்கும் போதும், கோவையைச் சேர்ந்த முக்கிய தொழிலதிபர்கள் உள்ளிட்டோர்களை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Follow
FOLLOW US
அன்பு வாசகர்களே....
இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.
CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!
- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை
தவறவிடாதீர்!
- ராஜஸ்தானில் சிறுமிகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த 5 இளைஞர்கள் கைது
- எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்க வலியுறுத்தி பட்ஜெட் கூட்டத்தில் இருந்து ஜெகன்மோகன் ரெட்டி வெளிநடப்பு
- பாகிஸ்தான் அணிக்கு மூளை இல்லை; என்ன செய்ய வேண்டுமென யாருக்கும் தெரியவில்லை - ஷோயிப் அக்தர்
- சம்பல் மசூதி நிர்வாகம் பொது நிலத்தை அபகரிக்க முயற்சி: உச்ச நீதிமன்றத்தில் உ.பி. அரசு தகவல்