Earthquake (Photo Credit: Pixabay)

பிப்ரவரி 25, கொல்கத்தா (West Bengal News): இந்தியாவின் கொல்கத்தா மற்றும் புவனேஸ்வருக்கும் இடையே வங்கக்கடலில் இன்று (பிப்ரவரி 25) காலை நிலநடுக்கம் (Earthquake) ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவாகியுள்ளது. இன்று காலை 6.10 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் லேசான பாதிப்புகள் கொல்கத்தாவிலும் உணர முடிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் இருந்து சுமார் 340 கிலோமீட்டர் தொலைவில், வங்கக்கடலில் 91 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. Road Accident: பைக் மீது கார் மோதி விபத்து; தூக்கி வீசப்பட்ட வாலிபர்கள்.. அதிர்ச்சிகர வீடியோ உள்ளே..!

அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு:

நிலநடுக்கத்தினால் பெரிய சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றாலும், பேரிடர் மேலாண்மைக் குழுக்களும் உள்ளூர் அதிகாரிகளும் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். நிலநடுக்கங்கள் ஏற்பட்டால், எச்சரிக்கையாக இருக்கவும், பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்படுகிறது.