ARTICLE AD BOX
பூட்டுகளின் வரலாறு
பூட்டுகள் முதல் முறையாக எகிப்தியர்களால் அறிமுகப்படுத்தப்பட்டதாக வரலாற்று நூல்களில் கூறப்பட்டுள்ளது. கி.மு. 4000 இல், அசிரியா நகரத்தில் பூட்டுசாவி பயன்படுத்தப்பட்டதாகவும், அதனுடன் சம்பந்தப்பட்ட மரத்தால் செய்யப்பட்ட பூட்டுகளே முதன்முதலாக பயன்பாட்டில் இருந்தன. அதற்கு பின்னர், முதலில் “பின் லாக்” என்ற பூட்டு வகை எகிப்தியர்களால் மரக்கட்டையிலிருந்து உருவாக்கப்பட்டது. இந்த பூட்டுகளுக்கான சாவி, நம்முடைய டூத்பிரஷ் போன்ற வடிவில் உருவாகி, மரத்தினால் செய்யப்பட்டிருந்தது. பூட்டின் உள்ளே உள்ள “பின்கள்” விலக்கி, தாழ்ப்பாளை திறப்பதற்கான வசதி இருந்தது.
ரோமர்களின் பங்களிப்பு:
ரோமர்கள், இந்த பூட்டுகளுக்கு புதிய வடிவம் மற்றும் பலம் அளித்தனர். கி.பி. 1 ஆம் நூற்றாண்டில் (870 - 900 BC), உலோகத்தால் செய்யப்பட்ட உறுதியான பூட்டுகளை உருவாக்கி, அது பயன்பாட்டில் வந்தது. சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு, கிரேக்கர்கள் மற்றும் ருமேனியர்கள் இந்த “பின் லாக்” பூட்டுகளை சிறிது சிறிதாக புதிய வடிவத்தோடு வடிவமைத்தனர்.
பதினெட்டாம் நூற்றாண்டில் பூட்டுகளின் வளர்ச்சி:
பதினெட்டாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பூட்டுகளின் புதிய வளர்ச்சி ஆரம்பமானது. 1788-ல், உருளை வடிவிலான “பின் டம்பிளர் பூட்டு” (Pin Tumbler Locks) கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பெருமை இங்கிலாந்து நாட்டுக்கு சென்றது. ராபர்ட் பாரோன் என்பவர் இந்த கண்டுபிடிப்பை செய்தவர். அதன் பிறகு, 1784ல் ஜோசப் ப்ரம்மைய்யாவின் ப்ரமாஹ் பூட்டு, 1818ல் ஜெர்மன் சப் பூட்டுகள், 1848ல் லினெஸ் ஏலின் பின் டம்பிளர் பூட்டு, 1857ல் ஜேம்ஸ் சர்ஜெண்டின் தானே பூட்டிக்கொள்ளும் பூட்டு, 1916ல் சாம்வேல் சேகலின் ஜெமி ப்ரூஃப் பூட்டு, மற்றும் 1924ல் ஹாரி சோரெஃப்பின் பாட்லாக் ஆகியவை உருவானது.
சீனா மற்றும் இந்தியாவின் பங்களிப்பு:
எகிப்து மற்றும் ஐரோப்பாவுடன் இணைந்து, ஆசியாவில் சீனா மற்றும் இந்தியா (திண்டு்ககல் பூட்டுகள் சிறப்பாக அமைக்கப்பட்டவை) இந்த பூட்டுகளின் வரலாற்றில் முக்கிய பங்கு வகிக்கின்றன. சீனர்கள் உலோகத்தால் செய்யப்பட்ட பூட்டுகளைப் பயன்படுத்தியிருந்தனர். இவர்கள் பலவிதமான மிருகங்களின் வடிவில் பூட்டுகளை உருவாக்கினார்கள். இதில் யானைகள், நீர் யானைகள், குதிரைகள் போன்ற மிருக வடிவம் கொண்ட பூட்டுகள் உள்ளன. பூட்டிய கதவுகள் கெட்ட ஆவிகளிடமிருந்து தங்களை பாதுகாப்பதாக நம்பி உள்ளனர்.