Samantha: `சினிமா துறையில் சிறந்த நடிகைகள் யார்?' -ரசிகரின் கேள்விக்கு, சமந்தா சொன்ன பதில்..!

3 hours ago
ARTICLE AD BOX

நடிகை சமந்தா எப்போதும் தனது சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவ்வாக இருந்து வருபவர்.

தன்னுடைய இன்ஸ்டாகிரம் பக்கத்தின் ஸ்டோரியில் `Ask me everything' என்ற தலைப்பில் ரசிகர்களின் கேள்விகள் பலவற்றிக்கு பதிலளித்து வருகிறார் சமந்தா. அப்படி ஒருவர் `சினிமா துறையில் சிறந்த நடிகைகள் யார்?' எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இந்தக் கேள்விக்கு பதிலளித்த சமந்தா, `` `உள்ளொழுக்கு' திரைப்படத்தில் நடிகை பார்வதி திருவோத்து, `சூக்ஷமதர்ஷினி' திரைப்படத்தில் நஸ்ரியா, `அமரன்' திரைப்படத்தில் `சாய் பல்லவி', `ஜிக்ரா' திரைப்படத்தில் ஆலியா பட், `CTRL' திரைப்படத்தில் அனன்யா பாண்டே எனப் பலரும் சிறப்பாக நடித்திருந்தனர்.

சமந்தா | Actress Samantha

இவர்களை தாண்டி `ஆல் வி இமேஜின் அஸ் லைட்' படத்தின் நடிகர்களான கனியும், திவ்ய பிரபாவும் அற்புதமாக நடித்திருந்தனர். இந்த நடிகைகளின் வேலைகள் எனக்குப் பிடித்திருந்தது. இவர்களெல்லாம் பல கடினங்களை மேற்கொள்கிறார்கள். இவையெல்லாம் சுலபமானது கிடையாது. இந்தாண்டில் அடுத்தடுத்து வெளிவரவிருக்கும் பல நடிகைகளின் பெர்பாமென்ஸிற்காக நான் காத்திருக்கிறேன்." எனக் கூறியிருக்கிறார்.

சமந்தா நடிப்பில் கடைசியாக `சிட்டடெல் - ஹன்னி பண்ணி' வெப் சீரிஸ் கடந்தாண்டு வெளியாகியிருந்தது. தற்போது `ரக்த் பிரம்ஹான்ட் - தி ப்ளடி கிங்டம்' என்ற வெப் சீரிஸில் இவர் நடித்து வருகிறார். இந்த சீரிஸும் கூடிய விரைவில் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகவிருக்கிறது.

Samantha: ``இதுதான் எனது கடைசி படம் என்று யோசிக்கும் அளவிற்கு..'' -சமந்தா சொல்வதென்ன?
Read Entire Article