உரையாடலில் இசைஞானி | “சற்றே தாமதமாக பேசத் தொடங்குகிற குழந்தை இளையராஜா” - ஆத்மார்த்தி!

3 hours ago
ARTICLE AD BOX
Published on: 
05 Feb 2025, 5:30 pm

இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவின் நேர்காணல்கள்தான் தற்போது விவாதப்பொருள்.. அவரை வழக்கம்போல் கொண்டாடித்தீர்க்கும் ரசிகர்கள் ஒருபுறம், அவர் கூறிய சில வார்த்தைகளை மட்டும் எடுத்துக்கொண்டு அதுதொடர்பாக மட்டும்பேசும் சிலர் மறுபுறம் என கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் இளையராஜா மட்டுமே இருக்கிறார்.

இளையராஜா
இளையராஜா

‘நாயகன்’ இளையராஜாவிற்கு 400ஆவது படம். ‘நாயகன்’ இசையின் மகத்துவம் அனைவரும் அறிந்தது. ஆனால், தனது 400 ஆவது படத்திலும் இளையராஜா தனது இசைக்கு விமர்சனங்களை எதிர்கொண்டார் என்றால் என்னவென்று சொல்வது. 400 ஆவது திரைப்படத்திற்கே இப்படி என்றால், அதற்கு முந்தைய 399 படங்களுக்கு? இளையராஜாவை முதல் படத்திலேயே மக்கள் ஏற்றுக்கொண்டார்கள்.. இது நிதர்சனமான உண்மை. ஆனால், இசை ஏகப்பட்ட எதிர்ப்புகளை, தடைகளைத் தாண்டித்தான் இளையராஜா இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறார்.

இளையராஜா குறித்து சமூக ஊடகங்களில் நடக்கும் விவாதங்கள் தொடர்பாக பேச எழுத்தாளர் ஆத்மார்த்தியை தொடர்பு கொண்டு பேசினோம்., அவர் கூறியதாவது, “இளையராஜா இப்போது பேசுவதை ஏன் அப்போதே பேசவில்லை என்றெல்லாம் சிலர் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால், அவருக்கு நேரமே இருந்ததில்லை. அவர் ஓடிக்கொண்டே இருந்தார். இப்போது, தன் பயணங்களை நினைவு கூறும் ஒருவரது உற்சாகத்தின் வெளிப்பாடாகத்தான் இளையராஜாவின் வார்த்தைகளைப் பார்க்கின்றேன்.

இளையராஜா இப்படி சொல்லலாமா என்றெல்லாம் சிலர் பேசுகின்றனர். அதையெல்லாவற்றையும் தாண்டி மிக முக்கியமான விஷயம் இசைக்கும்போது பேச்சு சாத்தியமில்லை. எனவே, இசையமைப்பாளர் இளையராஜா உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தில் பேசியதேயில்லை. அந்த காலக்கட்டங்களில் அவர் அளித்த பேட்டிகள் மிக சொற்பம். குறிப்பாக, அவர் குறித்த செய்திகளை அவர் எப்படி பார்த்திருப்பார் என்பதே ஆச்சரியம். சராசரி மனிதர் வாழும் வாழ்க்கையை இளையராஜா வாழவில்லை. அதேசமயத்தில் சராசரி மனிதரின் கண்களைப் போல் எதையும் இளையராஜா பார்க்கவில்லை.

எழுத்தாளர் ஆத்மார்த்தி
எழுத்தாளர் ஆத்மார்த்தி

இசை நிகழ்ச்சிகளின் மூலமாக இளையராஜா தனது ரசிகர்களை தொகுத்துப் பார்க்கிறார். இது அந்த பாடல்கள் வெளியான காலக்கட்டங்களிலேயே இளையராஜா இருக்க விரும்புவதாக தோன்றுகிறது. இவையெல்லாம் நான் புரிந்துகொண்டது, இது எதுவும் விமர்சனம் கிடையாது. இளையராஜா இன்று பாடல்களையும், பாடல்களின் சூழல்களையும், அந்த காலக்கட்டத்தையும் பேசுகிறார்.. இவை அத்தனையையும் நாம் தொகுத்துப் பார்த்தால், ‘சற்றே தாமதமாக பேசத் தொடங்குகிற குழந்தை இளையராஜா’ என்றே நான் எடுத்துக்கொள்கிறேன். தன் இசையை திரும்பிப் பார்ப்பதற்கே நேரமிருந்திராத ஒருவர் தன் வாழ்க்கையை இசையின் வழியாக திரும்பிப் பார்க்கிறார்.

இளையராஜாவை நாம் உள்வாங்கிக்கொள்வது அவரது இசை வழியாகத்தான். அவர் நமக்குள் இருப்பதும் இசையாக மட்டும்தான். இளையராஜாவின் இசையில் ஒரு சொல் கூட கூடுதலாக இருக்காது.

இளையராஜா
இளையராஜாஇளையராஜா

அதுவரையில், நடிகர்களுக்கு மட்டுமே இருந்த ரசிக மனோபாவத்தை, முதன்முதலாக இசைக்காக ஒருவர் பெற்றார். உச்சத்திற்கு சென்ற ஒருவர் அதிகமான படங்களுக்கு இசையமைக்க மாட்டார். அதிகமான படங்களுக்கு இசையமைப்பவர் உச்சத்திற்கு செல்வதற்கான பயணத்தில் இருப்பார். ஆனால், இளையராஜா எண்ணிக்கையிலும் அதிகம், உச்சத்திலும் இருந்தார். ஒவ்வொரு வருடம் அவர் இசையமைக்கும் படங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டுதான் இருந்தது.

அதுமட்டுமின்றி. மற்ற மொழிகளில் இவர் இசையமைக்கும் பாடல்களை மீண்டும் தமிழில் பயன்படுத்தமாட்டார். ஒப்பீட்டளவில் அது மிகக் குறைவாகத்தான் இருக்கும். அவரது காலத்தில் முதல், இரண்டு மற்றும் மூன்றாம் இடத்திலும் இளையராஜாதான் இருந்தார். நான்காவது இடத்தில்தான் மற்ற இசையமைப்பாளர்களைக் கொண்டுவர முடியும்” எனத் தெரிவித்தார்.

Read Entire Article