உயர்நீதிமன்ற நீதிபதி மீதான லோக்பால் வழக்குக்கு தடை: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

4 days ago
ARTICLE AD BOX

புதுடெல்லி: லோக்பால் அமைப்பு என்பது பிரதமர், ஒன்றிய அமைச்சர்கள், நீதிபதிகள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள் என உயர் பதவியில் வகிப்பவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் விசாரிப்பதற்கான அதிகாரம் கொண்டதாகும். இந்த நிலையில் உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் மீது லோக்பால் அமைப்பு வழக்கு பதிவு செய்த விவகாரம் தொடர்பாக ஒரு புகாரை அடிப்படையாக கொண்டு உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து பதிவு செய்த வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சூர்யகாந்த் மற்றும் அபய்.எஸ்.ஓஹா அடங்கிய மூன்று நீதிபதிகள் அடங்கிய சிறப்பு அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கு பதிவு செய்யப்பட்ட நீதிபதி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல்,\\” உயர்நீதிமன்ற நீதிபதி மீது வழக்கு பதிவு செய்த விவகாரத்தில் உரிய சட்டம் இயற்றப்பட வேண்டும். மேலும் அதுசார்ந்த உத்தரவுக்கும் தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,\\” இந்த விவகாரத்தில் கண்டிப்பாக சட்டம் இயற்றப்பட வேண்டும். இந்த செயல்பாடு என்பது கவலை அளிக்கும் விதமாக உள்ளது. மேலும் உயர்நீதிமன்ற நீதிபதி மீது லோக்பால் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக ஒன்றிய அரசு மற்றும் லோக்பால் அமைப்பு ஆகியோர் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பிக்கிறது. என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.

The post உயர்நீதிமன்ற நீதிபதி மீதான லோக்பால் வழக்குக்கு தடை: சுப்ரீம் கோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article