ARTICLE AD BOX
கர்நாடகா மாநிலம் கோலாரை சேர்ந்தவர் சதீஷ் ரெட்டி. கார் டிரைவரான இவருக்கு மீனாள் என்ற மனைவி உள்ளார். கணவன் மனைவி இருவரும், பெங்களூர் வர்த்தூர் அருகே வீடு எடுத்து தங்கி உள்ளனர். இந்நிலையில், மீனாளுக்கும், சித்ரதுர்காவை சேர்ந்த எலக்ட்ரீசியன் கிஷோருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பழக்கம், நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.
இதையடுத்து, மீனாளின் கணவர் சதீஷ் ரெட்டி வீட்டில் இல்லாத போது, கிஷோர் அடிக்கடி வீட்டிற்க்கு வந்துள்ளார். இது குறித்து ஒருகட்டத்தில் சதீஷ் ரெட்டிக்கு தெரியவந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த சதீஷ், தனது மனைவியை கண்டித்துள்ளார். இதனால் கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், சதீஷ் ரெட்டி தனது மனைவி மீனாளை அடித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மீனாள், தனது கணவரை விட்டு பிரிந்து சென்று வேறு வீட்டில் வசித்துள்ளார். ஆனால் அப்போதும் கிஷோர் அடிக்கடி மீனாளின் வீட்டிற்க்கு வந்து சென்றுள்ளார். இதனால் மீனாளின் வீட்டு உரிமையாளருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அவர் மீனாளிடம் கேட்ட போது, கிஷோர் தனது தம்பி என்று கூறியுள்ளார். இது குறித்து சதீஷ் ரெட்டிக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து, தனது மனைவியை தன்னிடம் இருந்து கிஷோர் பிரித்து விட்டதாக ஆத்திரம் அடைந்த சதீஷ் ரெட்டி, கிஷோரை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். இதையடுத்து, அவர் நேற்று முன்தினம் இரவு, மீனாள் தங்கி இருக்கும் வீட்டின் அருகே கத்தியுடன் காத்திருந்துள்ளார்.
அவர் போட்ட திட்டத்தின் படி, கிஷோர், மீனாளை பார்க்க வந்துள்ளார். அப்போது கிஷோருக்கும், சதீஷ் ரெட்டிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சதீஷ் ரெட்டி, கிஷோரை கத்தியால் குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த கிஷோர், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர், உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த வர்த்தூர் போலீசார், கிஷோரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், சதீஷ் ரெட்டி மீது கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்துள்ளார்.
Read more: “எனக்கு உன்ன விட, உன்னோட பொண்ண தான் பிடிச்சுருக்கு” காதலனால், காதலியின் மகளுக்கு நேர்ந்த சோகம்..
The post “உனக்கு, என்னோட பொண்டாட்டி கேக்குதா?” ஆத்திரத்தில் கணவன் செய்த கொடூரம்.. appeared first on 1NEWSNATION - Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.