உண்மையா சொல்லனும்னா துபாய் பிட்ச்ல எங்களுக்கு அந்த ஹெல்ப் இருக்கு – முகமது ஷமி ஓபன்டாக்

3 hours ago
ARTICLE AD BOX

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இருதரப்பு தொடர் கடந்த பல ஆண்டுகளாகவே நடைபெறாத வேளையில் இந்திய அணி ஐசிசி போட்டிகளில் மட்டுமே பாகிஸ்தான் அணிக்கு எதிராக பங்கேற்று விளையாடி வருகிறது. இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் பாதுகாப்பு காரணங்களால் பாகிஸ்தான் சென்று விளையாடாத இந்திய அணி தங்களது அனைத்து போட்டிகளையும் துபாய் மைதானத்தில் வைத்து விளையாடி வருகிறது.

துபாய் மைதானத்தில் எங்களுக்கு சாதகம் இருக்கு : முகமது ஷமி

இப்படி துபாய் மைதானத்தில் மட்டுமே இந்திய அணி விளையாடுவது இந்திய அணிக்கு கூடுதல் சாதகத்தை தருவதாகவும் அதன் காரணமாகவே தொடர்ச்சியாக இந்திய அணி அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற்று வருகிறது என்றும் சில விமர்சனங்கள் இந்திய அணியின் மீது உள்ளன. மேலும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை கைப்பற்ற வேண்டும் என்பதற்காகவே இந்திய அணிக்கு சாதகமாக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டதாக முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அதோடு இந்த விவகாரம் குறித்த பேச்சு கடந்த சில வாரங்களாகவே அதிகளவில் சமூக வலைதளத்தில் நிலவி வருகிறது. ஆனாலும் இப்படி ஒரே மைதானத்தில் விளையாடுவதால் தங்களுக்கு எந்த சாதகமும் இல்லை என இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீர் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் தெரிவித்திருந்தனர். இது குறித்து பேசிய கம்பீர் கூறுகையில் :

துபாய் மைதானத்தில் நாங்கள் ஒரு நாள் கூட பயிற்சி செய்யவில்லை என்றும் ஐசிசி கிரிக்கெட் அகாடமி மைதானத்தில் மட்டுமே பயிற்சி செய்து வருவதால் போட்டி நாளன்று எங்களுக்கும் மைதானம் விளையாட கடுமையாக தான் உள்ளது என்றும் ஆனாலும் அதனை சமாளித்து விளையாடுகிறோம் என்று தெரிவித்திருந்தார். அதேபோல கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் : ஒவ்வொரு போட்டியுமே ஒவ்வொரு ஆடுகளங்களில் புதிதாக நடைபெறுகின்றன.

எனவே எங்களுக்கு ஒன்றும் கூடுதல் சாதகம் எதுவும் கிடையாது. நாங்களும் மற்ற அணிகளை போல் தான் இங்கு விளையாடுகிறோம் என்று ரோகித் சர்மா தெரிவித்திருந்தார். இந்நிலையில் துபாய் மைதானத்தில் விளையாடுவது நிச்சயம் எங்களுக்கு சாதகத்தை அளித்திருக்கிறது என இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : நாங்கள் துபாய் மைதானத்தில் மட்டுமே விளையாடுவதால் எங்களுக்கு ஆடுகளம் மற்றும் கண்டிஷன் எவ்வாறு இருக்கிறது என்பதை எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது.

இதையும் படிங்க : நியூசிலாந்து அணிக்கெதிரான இறுதிப்போட்டியில் மாபெரும் சாதனையை நிகழ்த்த காத்திருக்கும் – விராட் கோலி

எங்களுக்கு துபாய் மைதானத்தின் ஆடுகளத்தின் தன்மை எவ்வாறு செயல்படும் என்கிற தன்மை தெரிவதால் உண்மையிலேயே அது போட்டியின் போது உதவுகிறது. நாங்கள் தொடர்ச்சியாக இங்கே மட்டுமே விளையாடி வருவதால் எங்களால் இந்த மைதானத்தில் இருந்து சற்று சாதகத்தை பெற்று சிறப்பாக செயல்பட முடிகிறது என முகமது ஷமி கூறியது குறிப்பிடத்தக்கது.

The post உண்மையா சொல்லனும்னா துபாய் பிட்ச்ல எங்களுக்கு அந்த ஹெல்ப் இருக்கு – முகமது ஷமி ஓபன்டாக் appeared first on Cric Tamil.

Read Entire Article