ARTICLE AD BOX
இந்திய கிரிக்கெட் அணி தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து இந்திய வீரர் குறித்த சில முக்கிய விஷயங்களை பேசி இருக்கிறார்.
எந்த இடத்திலும் இருக்கிறார்
இந்திய கிரிக்கெட் அணி துபாய் ஆடுகளத்திற்கு தகுந்தவாறு 15 பேர் கொண்ட அணி தேர்வு செய்யப்பட்டது. அதில் நான்கு சுழற் பந்துவீச்சாளர்கள் இடம் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பேட்டிங் வரிசையில் எந்த வீரரும் எந்த இடத்திலும் களமிறங்கி விளையாடக்கூடிய வகையில் இருக்க வேண்டும் என்று அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியிருந்தார். இந்த நிலையில் முதல் நான்கு இடங்களில் வலது கை ஆட்டக்காரர்கள் வர, ஐந்தாவது இடத்தில் இடது கை பேட்ஸ்மேன்க்கு பிறகு ஆறாவது வரிசையில் கேஎல் ராகுல் களம் இறக்கப்பட்டார்.
இருப்பினும் கேஎல் ராகுல் அந்த வரிசையிலும் சிறப்பாக விளையாடி தனது திறமையை நிரூபித்தார். மேலும் அதற்கு முன்னதாக நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் இடம், ஐந்தாவது இடம் என மாற்றம் செய்யப்பட்டு அதிலும் தன் திறமையை நிரூபித்து தற்போது ஐசிசி தொடரிலும் சிறப்பாக விளையாடி வரும் கே எல் ராகுல் குறித்து இந்திய முன்னாள் வீரரான நவ்ஜோத் சிங் சித்து தனது வருத்தத்தை தெரிவித்து இருக்கிறார். அதாவது காரின் உதிரி டயர் கூட அவ்வளவு பயன்படுத்தப்பட்டு இருக்காது ஆனால் கேஎல் ராகுல் மாற்றி மாற்றி பயன்படுத்தப்பட்டு வருகிறார் என சில விஷயங்கள் பேசி இருக்கிறார்.
உதிரி டயரை விட மோசம்
இதுகுறித்து அவர் கூறும் போது ” கேஎல் ராகுல் விஷயத்தை பொருத்தவரை உதிரி டயர் கூட அவ்வளவாக பயன்படுத்தப்படுவதில்லை. நீங்கள் விக்கெட் கீப்பராக அவரை தொடக்க இடத்தில், அதற்கு பின்னர் ஆறாவது இடத்தில் விளையாட வைத்தீர்கள். அதற்குப் பின்னர் பார்டர் கவாஸ்கர் தொடர் வரும்போது மூன்றாவது இடத்தில் விளையாட வைத்தீர்கள். அதற்குப் பின்னர் அவரை தொடக்க இடத்திற்கு மாற்றினீர்கள். நான் ஒன்றைச் சொல்கிறேன் ஒருநாள் தொடரை பொறுத்தவரை தொடக்க இடத்தில் விளையாடுவது என்பது எளிது. டெஸ்ட் கிரிக்கெட்டில் அதனை செய்வது மிகவும் கடினம் கே எல் ராகுல் ஒரு தன்னலமற்ற வீரர்” என்று நவ்ஜோத் சிங் சித்து கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க:என்னதான் ஃபைனல் போனாலும்.. இந்திய அணி இதை கட்டாயம் மிஸ் பண்ணும் – பாக் பசித் அலி பேட்டி
இந்திய அணியை பொறுத்தவரை ரோகித் சர்மா தொடக்க இடத்தில் அதிரடியாக விளையாடுவது குறித்து தன்னலமற்ற வீரர் என்று அனைவரும் கூறிவரும் நிலையில் கேஎல் ராகுல் விஷயத்திலும் நவஜோத் சிங் சித்து அவரை தன்னலமற்ற வீரர் என பேசி இருக்கிறார்.
The post பாவம்யா அந்த மனுஷன்.. உதிரி டயரை விட மோசமா யூஸ் பண்ணுறீங்க – இந்திய முன்னாள் வீரர் வருத்தம் appeared first on SwagsportsTamil.