உடல் பருமனை குறைக்க; சர்க்கரை நோயில் இருந்து விடுபட...தினமும் இந்த தோசையை சாப்பிடுங்கள்

3 days ago
ARTICLE AD BOX

சர்க்கரை நோயாளிகளுக்கு அருமருந்தாக இருக்கும் வரகரிசியை தினமும் சாப்பிடுவதால் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். மேலும் கல்லீரல் செயல்பாட்டிற்கும் நல்லது.கல்லீரலின் செயல்பாடுகளைத் தூண்டி கண் நரம்பு நோய்களை தடுக்கும் குணமும் வரகரிசிக்கு உள்ளது. 

Advertisment

அதுமட்டுமின்றி வரகரிசியில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் உடல் பருமனை குறைக்க உதவும். அவ்வளவு அற்புத நன்மைகள் கொண்ட வரகரிசியை வைத்து தோசை எப்படி செய்வது என்று ஹோம் குக்கிங் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பதாவது,

தேவையான பொருட்கள்

வரகரிசி  
உளுத்தம் பருப்பு  
அவல்  
வெந்தயம் 
உப்பு 

Advertisment
Advertisement

செய்முறை
 
வரகரிசி, உளுத்தம் பருப்பு, அவல் மற்றும் வெந்தயத்தை நன்கு கழுவவும். அவற்றை ஒரு பெரிய கிண்ணத்தில் சேர்த்து, தண்ணீரில் 6 மணி நேரம் ஊற வைக்கவும்.

6 மணி நேரம் கழித்து, தண்ணீரை வடிகட்டி, ஊறவைத்த பொருட்களை மிக்சி ஜாருக்கு மாற்றி சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்கவும்.

நன்கு அரைத்த மாவை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி 8 மணிநேரம் புளிக்க வைக்கவும். புளித்த மாவில்  தேவையான அளவு உப்பு சேர்த்து மெதுவாக கலக்கவும். 

வரகரிசி மசாலா தோசை | Kodo Millet Masala Dosa Recipe In Tamil | Healthy Recipes | Breakfast Recipes

பின்னர் ஒரு தவாவை சூடாக்கி, நெய் தடவி அதன் மீது வரகரிசி மசாலா தோசை மாவை ஒரு கரண்டியை ஊற்றவும். இதற்கு எப்பொதும் போல உருளைக்கிழங்கு அல்லது கேரட் மசாலா செய்து வைக்கவும். இந்த மசாலாவை மெதுவாக பரப்பி, ஓரங்களில் சிறிது நெய் ஊற்றவும்.

தோசை ஒரு பக்கம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு நன்றாக வேகவிடவும். தோசையை பின்னால் திருப்பி மசாலாவை மையத்தில் வைக்கவும். பின்னர் இரண்டு பக்கமும் திருப்பி போட்டு வேகவிட்டால் வரகரசி மசாலா தோசை ரெடியாகிவிடும்.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Read Entire Article