உடல் எடையை சுலபமாக குறைக்கனுமா? அப்போ தினமும் இட்லி, சாம்பார் சாப்பிடுங்க..

4 days ago
ARTICLE AD BOX

தற்போது உள்ள காலகட்டத்தில், பலருக்கு இருக்கும் பிரச்சனை என்றால் அது உடல் எடை தான். டல் எடையை எப்படியாவது குறைத்து விட வேண்டும் என்று போராடுபவர்களின் எண்ணிக்கை அதிகம். இதற்கு முக்கிய காரணம் உடலுழைப்பில்லாத வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கம் தான். இப்படி அதிகரித்த எடையை குறைக்க பலர் பல விதமான முயற்சிகளை செய்வது உண்டு.

அதிலும் குறிப்பாக உடற்பயிற்சி செய்கிறார்களோ இல்லையோ, டயட் என்ற பெயரில் உணவுகளை சரியாக சாப்பிடாமல் பட்டினியாக கிடப்பார்கள். இப்படி வாய்க்கு ருசியாக உணவுகளை சாப்பிட்டுவிட்டு, உடல் எடையைக் குறைப்பதற்காக பட்னியாக கிடப்பது மிகவும் கடினமான ஒன்று. அது மட்டும் இல்லாமல், இப்படி பட்னியாக கிடப்பது மிகவும் தவறான ஒன்று. இதனால் உடல் நலம் பாதிக்கப்படும்.

அதே சமயம், உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால் ஓட்ஸ் போன்ற வெளிநாட்டு உணவுகளை மட்டும் தான் சாப்பிட வேண்டும் என்ற எண்ணமும் மக்களிடையே உள்ளது. ஆனால் அது முற்றிலும் தவறு. நமது தென்னிந்திய உணவுகளை சாப்பிட்டே சுலபமாக உடல் எடையை குறைக்கலாம். ஆம், உடல் எடையை குறைக்க உதவும் மிகச்சிறந்த கலோரி குறைவான சில தென்னிந்திய உணவுகளைக் காண்போம்.

அந்த வகையில், முதல் இடத்தில இருப்பது இட்லி தான். தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான, பலருக்கு மிகவும் பிடித்த ஒரு உணவு என்றால் அது இட்லி தான். இட்லியை ஆவியில் வேக வைப்பதால், இது ஆரோக்கியமான காலை உணவாக கருதப்படுகிறது. ஆம், ஒரு இட்லியில் வெறும் 39 கலோரிகள் மட்டுமே உள்ளது. எனவே உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் காலையில் 2 இட்லியை சட்னி, சாம்பாருடன் சாப்பிடலாம்.

அது மட்டும் இல்லாமல், பருப்பு மற்றும் காய்கறிகளைக் கொண்டு தயாரிக்கப்படும் சாம்பாரை நாம் இட்லியுடன் சேர்த்து சாப்பிடுவதால் உடல் எடை குறைவது மட்டும் இல்லாமல், உங்களது உடல் ஆரோக்கியமும் மேம்படும். இதனால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இட்லி சாம்பாரை விட சிறந்த காலை உணவு இருக்க முடியாது. அதே சமயம், 2 இட்லியை மட்டும் தான் சாப்பிட வேண்டும்.

உப்புமா, பலருக்கு பிடிக்காத தென்னிந்திய உணவுகளில் ஒன்று. ஆனால் ரவைக் கொண்டு தயாரிக்கப்படும் உப்புமா சாப்பிட்டு உடல் எடையை சுலபமாக குறைக்க முடியும். ஆம், உண்மை தான் ஒரு கப் உப்புமாவில் 200 கலோரிகள் மட்டுமே உள்ளது. இதனால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் காலை உணவாக உப்புமாவை சாப்பிடலாம். இதில் ரவைக்கு பதில் நீங்கள் திணை ஆகியவற்றையும் பயன்படுத்தலாம்.

இது மட்டும் இல்லாமல், நீங்கள் காலை உணவாக பச்சை பயறு தோசை, ரசம் ஆகியவற்றையும் எடுத்துக் கொள்ளலாம். இது போன்ற உணவுகளால் உடல் எடை விரைவாக குறையும். குறிப்பாக, ஒரு கப் ரசத்தில் 60 கலோரிகளே உள்ளன. இதனால் ஒருவித புத்துணர்ச்சி கிடைப்பது மட்டும் இல்லாமல், செரிமானம் சீராக நடைபெற்று, எடை இழப்புக்கு உதவி செய்யும். இதனால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இனி பட்னியாக இருக்காமல் இது போன்ற உணவுகளை அளவாக சாப்பிடுங்கள்..

Read more: பயன்படுத்திய சமையல் எண்ணெயை தூக்கி எறிகிறீர்களா..? இதை இப்படிப் பயன்படுத்துங்கள்!

The post உடல் எடையை சுலபமாக குறைக்கனுமா? அப்போ தினமும் இட்லி, சாம்பார் சாப்பிடுங்க.. appeared first on 1NEWSNATION - Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.

Read Entire Article