உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் அவசியம் குடல் ஆரோக்கியம்!

2 hours ago
ARTICLE AD BOX

குடல் மற்றும் மூளைக்கு இடையே குடல்-மூளை அச்சு (gut–brain axis) எனப்படும் வலுவான தொடர்பு அமைப்பு உள்ளது. எனவே, மூளைக்கு அடுத்தபடியாக செயல்படும் குடல் மிகவும் முக்கியம். அதை சரியாக பாதுகாக்காவிட்டால், பல பிரச்னைகள் உருவாகும்.

குடல் பாதிப்பிற்கு காரணங்கள் என்ன..?

*பரம்பரையில் மரபணு ரீதியாக யாரேனும் பாதிக்கப்பட்டிருப்பது

*மன அழுத்தம்,

*உணவுக் கட்டுப்பாடு இல்லாமை,

*குடலில் நல்ல பாக்டீரியாக்களின் உற்பத்தி குறைதல்

*ப்ரோ - பயோடிக் உணவுகளைத் தவிர்த்தல்

*வயிற்று வலி மற்றும் வாயுத் தொல்லை அதிகரித்தல்

போன்ற பல.

செரிமான கோளாறுகளின் சில அறிகுறிகள்:

*மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு

*வயிற்றின் மேல் பகுதியில் வலி

* குமட்டல், வாந்தி

*நெஞ்செரிச்சல்

*அஜீரணம்

*வீக்கம்

*எதிர்பாராத எடை இழப்பு

*மலத்தில் மாற்றங்கள்

*சோர்வு, தலைவலி, பல்வலி

*முறையற்ற உணவுப் பழக்கம்

*போதிய தண்ணீர் உட்கொள்ளாதது.

இதை சரி செய்ய, உணவில் அடிக்கடி சேர்க்க வேண்டிய முக்கியமான பொருட்கள்:

** பூண்டு

சமையலில் மிக முக்கியமான அங்கம் வகிக்கும் பூண்டில் அல்லிசின், செலினியம், பாஸ்பரஸ், கால்சியம், துத்தநாகம், குரோமியம், மற்றும் வைட்டமின்கள் சி , பி காம்ப்ளக்ஸ் அதிகமாக உள்ளது. பாக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்க்கும் பண்புகள் இருப்பதால், கல்லீரலையும் பித்தப்பையையும் சுத்தப்படுத்தி, நோயெதிர்ப்பு செயல்பாட்டை மேம்படுத்துகிறது. எல்டிஎல் கொழுப்பைக் குறைக்கிறது.

**பச்சை இலை காய்கறிகள்

பச்சை இலை காய்கறிகள், கீரைகளில், வைட்டமின் சி, கே, பி காம்ப்ளக்ஸ், பீட்டா கரோட்டின், இரும்பு, அயோடின், கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், சல்பர் மற்றும் குளோரோபில் நிறைந்திருப்பதுடன், வலுவான ப்ரீபயாடிக் விளைவைக் கொண்டுள்ளன. அழற்சி எதிர்ப்பு உணவாக இருப்பதால், செரிமான மண்டல நிலைமைகளை தடுக்கும் தன்மையுடையது. சாலடுகள், பாஸ்தா, அல்லது பருப்பு போன்றவைகளில் இதை சேர்த்துக்கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
நல்லொழுக்கமுள்ள குழந்தைகளின் சிறந்த 7 பழக்கங்கள்!
Gut health

** எலுமிச்சை

எலுமிச்சையில் பெக்டின் நார்ச்சத்து, வைட்டமின் சி, பொட்டாசியம், கால்சியம் அதிகம் உள்ளது. எலுமிச்சை ஆரோக்கியமான நோயெதிர்ப்பு சக்திக்கு உதவுகிறது. சிறிது எலுமிச்சை சாறுடன் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான தண்ணீரை காலையில் குடிப்பது, குடல் இயக்கங்களை ஆதரிக்கிறது.

** தானிய வகைகள்

அந்தக்காலம் முதலே, முழு தானியங்கள் நமது உணவில் பிரதானமாக இருந்து வருகின்றன. செரிமான அமைப்பு சீராக செயல்பட வேண்டுமெனில், வழக்கமான உணவில் முழு தானியங்களையும் சேர்த்துக்கொள்வது தேவை. நார்ச்சத்து, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பிற நுண்ணூட்டச் சத்துக்கள் இதில் ஏராளமாக இருப்பதால், மலத்தை மென்மையாக்குவதோடு, மலச்சிக்கலையும் தடுக்க உதவுகின்றன.

** சியா விதைகள்

சியா விதைகளில், நார்ச்சத்து அதிகம் உள்ளது. சியா விதைகள் சாப்பிட்ட பிறகு வயிற்றில் ஒரு ஜெல் போன்ற பொருளை உருவாக்குகிறது. இது ஒரு ப்ரீபயாடிக் ஆக செயல்பட்டு, குடலில் நன்மை பயக்கும் பாக்டீரியா தாவரங்களின் நார்ச்சத்து வளர்ச்சியை ஊக்குவித்து, மலச்சிக்கலை அகற்ற உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
பணம் சம்பாதித்தால் போதுமா? அது கையில் தங்க வேண்டாமா?
Gut health

** கொய்யா

இந்தப் பழத்தின் மிருதுவான தன்மையும் இனிப்பு-புளிப்புச் சுவையும் வயிற்றுப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு உதவுகிறது. நார்ச்சத்து மற்றும் வைட்டமின்களின் சிறந்த ஆதாரமாகிய குடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நன்மை பயக்கும் கொய்யா விதைகள் ஒரு சக்திவாய்ந்த மலமிளக்கியாகும். குடல் இயக்கத்தை எளிதாக்குகிறது.

**தயிர்

குடல் ஆரோக்கியமான உணவுகளில், தயிர் பாப்புலராக விளங்ககிறது. உயிருள்ள, நன்மை பயக்கும் பாக்டீரியா என்று குறிப்பிடப்படும் புரோபயாடிக்குகள் இதில் ஏராளமாக உள்ளன. செரிமானத்தை மேம்படுத்தவும் ஆரோக்கியமான செரிமான மண்டலத்தை பராமரிக்கவும் உதவுகிறது. ஆரோக்கியமான காலை உணவாகிய தயிரை பழத்துடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

குடல் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியம் கட்டுக்குள் இருப்பதை உறுதிசெய்ய, மேற்கூறிய சத்தான உணவுகள் முக்கியம். ஆனால், எதையும் அளவுடன் எடுத்துக்கொள்வது ஆரோக்கியத்தை அளிக்கும்.

Read Entire Article