உடலுறவு வேண்டுமானால் ரூ.5000 கொடு; கணவரிடம் கெடுபிடி காண்பித்த இளம் மனைவி.. பெங்களூரில் ஷாக்.!

10 hours ago
ARTICLE AD BOX


நவீன யுகத்தில் ஒவ்வொருவரின் தனி உரிமைக்கும் குரல் பதிவு செய்யப்படுகிறது என்றாலும், திருமணத்துக்கு முன்பே உங்களின் எதிர்காலம் குறித்து விவாதித்து, அதற்கு ஒத்துழைக்கும் நபர்களுடன் திருமணம் செய்யுங்கள். 

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர், வயலி பகுதியில் வசித்து வருபவர் ஸ்ரீகாந்த். இவரின் மனைவி பிந்து ஸ்ரீ. தம்பதிகளுக்கு கடந்த 2022ல் திருமணம் நடைபெற்று முடிந்தது. கணினி பொறியாளரான ஸ்ரீகாந்த், தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். திருமணமான பின்னர் தம்பதிகளிடையே கருத்து வேறுபாடு நிலவி, அவ்வப்போது தகராறு நடந்ததாக கூறப்படுகிறது..

நெருங்குனா தற்கொலை

நமக்கு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம், தத்தெடுத்து வளர்ப்போம் என பிந்துஸ்ரீ கூறியுள்ளார். மேலும், அவருடன் கணவர் நெருக்கம் காட்டினாலோ, நெருங்கி வந்தாலோ தற்கொலை செய்வேன் எனவும் மிரட்டி இருக்கிறார். இந்த விஷயம் குறித்து இருவருக்கும் கருத்து மோதல் எழுந்துள்ளது. ஸ்ரீகாந்த் இதனால் மனைவியுடன் வாழ பிடிக்காமல் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.

இதையும் படிங்க: தீராத வயிற்றுவலி; திருமணமான 2 ஆண்டுகளில் இளம்பெண் விபரீதம்.. கண்ணீரில் குடும்பத்தினர்.!

இந்த நிலையில், மனைவியின் மீது கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், "எனக்கும் - மனைவிக்கும் 2022 ல் திருமணம் நடந்தது. எங்களுக்குள் ஒன்றுமே நடக்கவில்லை. குழந்தை பெற்றால் அழகு பறிபோகும் என மனைவி குழந்தையை தத்தெடுத்து வளர்க்கலாம் என கூறுகிறார். 

தாம்பத்தியத்துக்கு ரூ.5000 

அவருடன் சின்ன நெருக்கம் காண்பித்தாலும், உனது பெயரை எழுதி வைத்து தற்கொலை செய்வேன் என மிரட்டுகிறார். அப்படி என்னுடன் கட்டாயம் தாம்பத்தியம் வேண்டும் என்றால் நாளொன்றுக்கு ரூ.5 ஆயிரம் வேண்டும் என்கிறார். விவாகரத்து கேட்டாலும் ரூ.45 இலட்சம் கொடுக்க வேண்டும் என்கிறார். எனது மனைவியால் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறேன்" என கூறியுள்ளார்.

இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, தன் மீதான புகாரை அறிந்துகொண்ட பிந்துஸ்ரீ, கணவருக்கு எதிராக வரதட்சணை புகார் அளித்துள்ளார். 
 

இதையும் படிங்க: தண்ணீர் கேனில் தொடங்கிய தகராறு; திருமணத்தை நிறுத்திய மணமக்கள்.. உற்றார்-உறவினர்கள் சண்டையில் அதிர்ச்சி.!

Read Entire Article