ஈஸ்வரிக்கு செல்வி கொடுத்த பதிலடி: பாக்யாவிடம் முடிவு சொன்ன கோபி: அடுத்து என்ன?

3 hours ago
ARTICLE AD BOX

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல், ரசிகர்கள் மத்தியில் ஓராளவு வரவேற்பை பெற்று வந்த நிலையில், இனியாவின் காதல் விவகாரம் தெரியவந்தவுடன், தற்போது விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை பார்ப்போமா.

Advertisment

கோபியும் செழியனும் சேர்ந்து ஆகாஷை அடித்து கை, கால்களை உடைத்து அனுப்பிய நிலையில், இவர் ஹாஸ்பிட்டலில் அட்மிட் ஆகி இருக்கிறான். இதனால் கடுப்பாக பாக்யா செழியனை அடித்துவிட்ட நிலையில், எழில் ஆகாஷை ஹாஸ்பிட்டலில் சென்று பார்த்து வந்திருக்கிறான். இது தெரிந்த இனியா, இனிமேல் நான் அவனை பார்க்க மாட்டேன் என்று சத்தியம் செய்துகொடுத்துவிட்டேன். அவனை இனிமேல் ஒன்றும் செய்யாதீர்கள் என்று மன்னிப்பு கேட்கிறாள்.

மேலும், நான் இந்த வீட்டில இருப்பது பிடிக்கவில்லை என்றால’ சொல்லிவிடுங்கள் நாள் போய்விடுவிடுகிறேன் என்று சொல்ல, எழில் அவளை சமாதானம் செய்து உள்ளே அழைத்து செல்கிறான். அதன்பிறகு, ஈஸ்வரி அமர்ந்து யோசித்துக்கொண்டிருக்க, செல்வி அங்கே வருகிறாள். இதனால் கடுப்பாகும் ஈஸ்வரி இப்போ எதுக்காக இங்க வந்தே, ஒழுங்க வெளியில போ என்று சொல்ல, நான் ஒன்னும் சும்மா வரவில்லை. என் மகனை யாரோ அடித்துவிட்டார்கள் அவன் ஹாஸ்பிட்டலில் இருக்கிறான்.

இப்போது என் கையில் பணம் இல்லை. அதனால் பாக்யா அக்காவிடம் என் நகை இருக்கிறது அதை வாங்கிட்டு போக வந்தேன் என்று சொல்ல, பாக்யா உள்ளே சென்று நகைகளை எடுக்கிறாள். அப்போது ஈஸ்வரி இவ சம்பந்தப்பட்ட எதுவும் இங்கு இருக்க கூடாது. எல்லாதையும் கொடுத்து அனுப்பு என்று சொல்ல, இவளை பார்த்தாலே கோபம் வருகிறது. முதலில் இங்கிருந்து போக சொல்லுங்கம்மா என்று என்று கோபி சொல்ல, அப்போது செல்வி நானும் இந்த வீட்டு வாசலை மிதிக்க விரும்பவல்லை என்று சொல்கிறாள்.

Advertisment
Advertisements

மேலும் எல்லோரும் போலீஸில் புகார் கொடுக்க சொன்னாங்க, நான் தான் புகார் கொடுத்தால், இனியா பாப்பா காதல் விவகாரம் தெரியவரும், பாப்பாவை ஸ்டேஷனுக்கு அழைத்து விசாரிப்பாங்கனுதான் வேண்டாம் என்று விட்டுவிட்டேன். இனியா பாப்பாவை 4 வயதில் இருந்து நான் எடுத்து வளர்த்திருக்கிறேன். உங்களுக்கு வேணா ரெண்டு பேரும் வேற வேறயா இருக்கலாம். ஆனால் எனக்கு ரெண்டு பேரும் ஒன்னுதான் என்று ஈஸ்வரிக்கு பதிலடி கொடுக்கிறாள். ஆனாலும் ஈஸ்வரி கோபி இருவரும் அவமானப்படுத்தியே பேசிக்கொண்டு இருக்கின்றனர். அதன்பிறகு செல்கி இங்கிருந்து கிளம்பிவிடுகிறாள்.

அடுத்து பாக்யா கிச்சனியில் இருந்து வேலை பார்க்க, செல்வியின் ப்ரண்ஷிப்பை கட் பண்ணிவிடு, இனி ரெஸ்டாரண்டை நீ பார்த்துக்கோ, வீட்டை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்ல, நீங்க எப்போ இந்த வீட்டை விட்டு போறீங்க என்று பாக்யா கேட்க, இதுவரை என் அம்மாவுக்காக இந்த வீட்டில் இருந்தேன். ஆனால் இனிமேல் என் மகளின் வாழ்க்கைக்காக இந்த வீட்டில் இருக்கப்போகிறேன் என்று சொல்ல, பாக்யா கடுப்பாகிறாள். அத்துடன் எபிசோடு முடிகிறது. 

Read Entire Article